ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள்


செய்திகள்  

தெய்வீக கலை கண்காட்சி ஓரிக்கையில் தொடங்கப்பட்டது - 26-08-2021

காஞ்சீபுரம் ஓரிக்கையில் நேற்று (26 ஆக.) ஸ்ரீ ஆச்சார்யாள் ஆசியுடன் தெய்வீக கலை கண்காட்சி, மூத்த கலைஞரான ஸ்ரீ மணிவேலுவின் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களின் தெய்வங்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்ரீ ஆச்சார்யாள் (20 செப். வரை) கடைபிடிக்கும் சாதுர்மாஸ்ய காலத்திற்கு கண்காட்சி திறந்திருக்கும்.

மேலும் தகவல்

ஜயந்தி மஹோத்ஸவம் - 9 மார்ச் 2021 - மேலும் பல இடங்களில்

9 மார்ச் 2021

கலவை கிராமத்தில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜய்ந்தியை முன்னிட்டு கலவை சங்கர மடத்தின் சார்பில் அன்னதானம்  நடைபெற்றது.

ஜயந்தி மஹோத்ஸவம் - 9 மார்ச் 2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி பல இடங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவற்றில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

  1. மகேந்திர மங்கலம் ஆதிஆசார்யாள் பகவத்பாதாள் கோவில் - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்  3 வருடம் இங்கு தங்கியிருந்து கல்வி கற்றார்.2.  தண்டலம் - 1 முதல் 9 மார்ச் வரை ரிக்சம்ஹிதா ஹோமம், நான்கு வேத பாராயணம், சூர்ய நமஸ்காரம், சுந்தரகாண்ட பாராயணம், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனா, பவமாந பாராயணம் நடத்தப்பட்டது.

செறுகுடி கோவில் கும்பாபிஷேகம்

10 மார்ச் 2021

ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ விருபாக்‌ஷேஸ்வர ஸ்வாமி கோவில் மஹாகும்பாபிஷேகம் 10 மார்ச் 2021 அன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

செறுகுடி கோவில் கும்பாபிஷேகம்

10 மார்ச் 2021

ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ விருபாக்‌ஷேஸ்வர ஸ்வாமி கோவில் மஹாகும்பாபிஷேகம் 10 மார்ச் 2021 அன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

ஜயந்தி மஹோத்ஸவம் - கும்பகோணம் சங்கர மடம் - பூர்ணாஹுதி

9 மார்ச் 2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி தினத்தையொட்டி கும்பகோணம் சங்கர மடத்தில் ஹோமங்கள் செய்யப்பட்டு ஆசார்யார்களின் முன்னிலையில் பூர்ணாஹுதி வழங்கப்பட்டது. கலச தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல கோவில்களிலிருந்து அனுப்பப்பட்ட ப்ரசாதம் ஸ்ரீ ஆசார்யாளுக்குத் தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காண இங்கு சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/jayanti-mahotsavam-74410-20210310.html

ஜயந்தி மஹோத்ஸவம் - கும்பகோணம் சங்கர மடம் - பூர்ணாஹுதி

9 மார்ச் 2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி தினத்தையொட்டி கும்பகோணம் சங்கர மடத்தில் ஹோமங்கள் செய்யப்பட்டு ஆசார்யார்களின் முன்னிலையில் பூர்ணாஹுதி வழங்கப்பட்டது. கலச தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல கோவில்களிலிருந்து அனுப்பப்பட்ட ப்ரசாதம் ஸ்ரீ ஆசார்யாளுக்குத் தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காண இங்கு சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/jayanti-mahotsavam-74410-20210310.html

கும்பகோணம் சங்கரமடத்தில் விசேஷ பூஜைகள்

9 மார்ச் 2021

கும்பகோணம் சங்கர மடத்திலுள்ள 62, 63, 64 சங்கராசார்ய ஆசார்யர்களின் அதிஷ்டானங்களுக்கு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் தனது ஜயந்தி தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் வீடியோவை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/visesha-pujas-20878-20210310.html

கும்பகோணம் சங்கரமடத்தில் விசேஷ பூஜைகள்

9 மார்ச் 2021

கும்பகோணம் சங்கர மடத்திலுள்ள 62, 63, 64 சங்கராசார்ய ஆசார்யர்களின் அதிஷ்டானங்களுக்கு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் தனது ஜயந்தி தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் வீடியோவை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/visesha-pujas-20878-20210310.html

சத்ராபூர் ஒரிஸ்ஸாவில் கண் பராமரிப்பு மையத் திறப்பு விழா

6 மார்ச் 2021

சத்ராபூர், ஒரிஸ்ஸாவிலுள்ள சங்கரா கண் மையத்தில் புதிய கண் பராமரிப்பு மையம் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளின் ஜயந்தி தினத்தையொட்டி திறக்கப்பட்டது. இங்கு அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை 13 மார்ச் 2021 வரை நடைபெறவுள்ளது.

66ஆவது ஆசாரியரின் ஆராதனை மஹோத்ஸவம்

6 மார்ச் 2021

 மக மாச க்ருஷ்ண அஷ்டமியான 6 மார்ச் 2021 அன்று காஞ்சி காமகோடி பீடத்தின் 66ஆவது சங்கராசார்யாரான பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய - VI - ஸ்வாமிகளின் ஆராதனை கும்பகோணத்திலிருக்கும் சங்கர மடத்தில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது. 

66ஆவது ஆசாரியார் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள உதயாம்பாக்கம் கிராமத்தில் அவதரித்தார். அத்வைத வேதாந்த சாஸ்திரங்களை கற்கவும், கற்பிக்கவும், இதன் மூலம் காப்பாற்றவும் அத்வைத சபாவை நிறுவினார். 1907 ஆம் ஆண்டு ஆற்காடு மாவட்டத்திலுள்ள கலவை கிராமத்தில் முக்தியடைந்தார்.

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காண இங்கே சொடுக்கவும் :

https://www.kamakoti.org/kamakoti/news/2020/aradhana-of-78637-20210306.html

 

ஸ்ரீமடத்தில் அனுஷம் ரதோத்ஸவம்

5 மார்ச் 2021

5 மார்ச் 2021 அன்று அனுஷபூஜையை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீமடத்தில் தங்க ரதோத்ஸவம் நடைபெற்றது. 

திப்பிராஜபுரம் விஜயம்

4 மார்ச் 2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் 4 மார்ச் 2021 அன்று திப்பிராஜபுரத்திற்கு விஜயம் செய்தார். ஸ்ரீஆசார்யாள் இங்கிருக்கும் அக்ரஹாரத்தில் நடந்து சென்று பக்தர்களின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டார். இங்கிருக்கும் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்க வேத பாடசாலைக்கு விஜயம் செய்தார். அதன்பிறகு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி கோவில், மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீசோமேஸ்வர ஸ்வாமி கோவிலுக்கும் விஜயம் செய்தார். திப்பிராஜபுரம் கிராமம் திருமலைராஜன் மற்றும் முடிகொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு ஸ்ரீமடத்தின் முந்தைய ஆசாரியர்கள் பல வருடங்களுக்கு முன்னர் விஜயம் செய்துள்ளனர் என்பது அறியத்தக்கது.

இவ்விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/visit-to-tippirajapuram-20210306.html

 

ஆலங்குடி விஜயம்

4 மார்ச் 2021 அன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆலங்குடியிலுள்ள சகடாபுரமடத்தின் ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி கோவிலுக்கு விஜயம் செய்தார்.

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/visit-to20210306.html

 

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி தரிசனம்

04 மார்ச் 2021

புஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் 4 மார்ச் 2021 அன்று மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமியின் தரிசனம் செய்யவுள்ளார்.

பாகவத ஸப்தாஹம் - கலவை வ்ருத்தாஸ்ரமம்

03-03-2021

கலவையிலுள்ள வ்ருத்தாஸ்ரமம் (முதியோர் இல்லம்) வளாகத்தில் 3 முதல் 9 மார்ச் வரையில் 7 நாட்கள் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசிகளுடன் ஸ்ரீமத்பாகவத சப்தாஹம் நடைபெறவுள்ளது.

ஜயந்தி மஹோத்ஸவம் - வேத பாராயணம் - ஸ்வாமிமலை

பூஜ்யஸ்ரீ  சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தியை முன்னிட்டு ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோவிலில் கீழ்காணும் நிகழ்ச்சிகள் 2 முதல் 9 மார்ச் வரை நடைபெறவுள்ளன:

  • ரிக் வேத சம்ஹிதா பாராயணம்
  • க்ருஷ்ண யஜுர், கெளத்தம ஸாமம், அதர்வ வேத பாராயணம்
  • 125 வேதவித்வானகளுக்கு வஸ்திரம், சம்பாவனை கொடுத்து கெளரவித்தல்  - ஸ்வாமிநாதஸ்வாமிக்கு வ்யாஸபூஜை வஸ்திர சமர்ப்பணம் 
  • தினமும் மாலை வேளையில் பவமான பாராயணம், கலச அஷ்டோத்திரம், தீபாராதனை, வேத அவதாரிகை மற்றும் நாதோபாசனை

 

9 மார்ச் 2021 அன்று - ம்ருத்யுன் ஜய, ஆயுஷ்ய, ஆவஹந்தி, தன்வந்திரி ஹோமம் மற்றும் குமார போஜனம்

 

 

 

மார்ச் மாதத்தில் ஸ்ரீ மடத்தில் விசேஷ பூஜைகள்

5 மார்ச்    -  வெள்ளி  - அனுஷம்

6 மார்ச்    - சனி  - கலவை ஸ்ரீ பராத்பரகுரு ஆராதனை

9 மார்ச்    - செவ்வாய்  - பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளின் ஜயந்தி வைபவம்

10 மார்ச்  - புதன்  - ப்ரதோஷ பூஜா

11 மார்ச்  - வியாழன் -  மஹா சிவராத்திரி

14 மார்ச்  - ஞாயிறு -  கலவை பரமேஷ்டி குரு ஆராதனை

26 மார்ச்  - வெள்ளி  -  பூஜ்யஸ்ரீ குரு ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை, ப்ரதோஷ பூஜை

28 மார்ச்  - ஞாயிறு  - பெளர்ணமி பூஜை

 

காமாக்ஷி அம்பாள் விஸ்வரூப தரிசனம் - ப்ரஸாதம் சமர்ப்பணம்

28 பிப்ரவரி 2021

இன்று காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. திருவானைக்காவல் சங்கர மடத்திற்கு வந்திருக்கும்  பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு இந்த சேவையின் ப்ரஸாதம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலசெய்திப்பகுதியில் காணலாம்.

நற்செயல்களுக்கு நன்கொடை அளித்தால் நன்மை பெருகும்

28 பிப்ரவரி 2021

ஸ்ரீராமஜன்ம பூமி நிர்மானுக்கு ஆஸ்திக அன்பர்கள் பொருள் திரட்டி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளிடம் திருச்சியில் 28 பிப்ரவரி 2021 அன்று கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆசாரியார், நற்செயல்களுக்கு நன்கொடை அளித்தால் நன்மை பெருகும் என்று ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் விவரங்களுடன் தினமலர் தமிழ் நாளிதழில் வந்த செய்தியின் படத்தை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணலாம்.

 


27 பிப்ரவரி 2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மதுரை சங்கர மடத்தில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு ஆசி அளித்தார்.

மதுரை தமிழ் நாளிதழில் வந்த நிழற்படத்தை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காண இங்கு சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/blessings-to20210303.html

குவஹாதியில் கல்யாணோத்ஸவம்

அஸ்ஸாம் குவஹாதியிலுள்ள பூர்வ திருப்பதி பாலாஜி கோவிலில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசிகளுடன் பாலாஜிக்கு கல்யாணோத்ஸவம் 27 பிப்ரவரி 2021 அன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலசெய்திப் பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/kalyanotsavam-performed20210303.html

பூர்வ திருப்பதி பாலாஜி கோவில் ப்ரஹ்மோத்ஸவம்

26-02-2021

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண ஆசிகளுடன் பிப்ரவரி 26லிருந்து 28 வரை பூர்வ திருப்பதி பாலாஜி கோவிலின் ப்ரமோத்ஸவம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் அழைப்பிதழை இவ்வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

காசி பண்டிதர்களின் வரவேற்பு

23-02-2021

சங்கர மடம், அக்னி தீர்த்தம், ராமேஸ்வரம்.

 

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு, காசியைச் சேர்ந்த பண்டிதர்களும், முக்கிய நபர்களும் கொண்ட குழு காசிக்கு விஜயம் செய்து அந்தப் புனித நகரை ஆசீர்வதிக்க வேண்டி வரவேற்புப் பத்திரம் அளித்தது. இந்த வரவேற்புப் பத்திரம் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்திலுள்ள சங்கர மடத்தில் அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவைச் சேர்ந்த முக்கியமானவர்கள், பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு பாதபூஜை செய்து இந்த வரவேற்புப் பத்திரத்தை தங்களின் சார்பாகவும், மற்றும் பல முக்கிய புராதன நிறுவனங்களின் சார்பாகவும் அளிப்பதாக அறிவித்தனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய வித்வான்கள், ஸ்ரீ ஸ்ரீ பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யாரின் காசி யாத்திரையையும், பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யாரின் காசி யாத்திரையையும் நினைவு கூர்ந்தனர். மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பாரததேசமெங்கும் யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். 

இந்நிகழ்ச்சியில் தனது அனுக்ரஹ உரையை அளித்த பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள், காசி ராமேஸ்வர யாத்திரையின் புராதன மகத்துவம், ஆதி சங்கராசார்யாரின் காசி யாத்திரை, காசி நகரின் பெருமை, காசி எப்படி பண்டிதர்களின் இருப்பிடமாகவும், ஞானத்திற்கு செல்லவேண்டிய இடமாகவும் விளங்குவதைப் பற்றியும் யாத்திரை செல்ல வேண்டியதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதப் பிரிவின் தலைவர் முனைவர் ஜுகல்கிஷோர் மிஸ்ரா, மற்றும் புது டில்லியிலுள்ள லால் பகதூர் சம்ஸ்கிருத வித்யாபீட்டின் வேதப் பிரிவின் நடத்துனர் ஸ்ரீ கோபால் சர்மா உபாத்யாயா,  மேலும் காசியிலுள்ள வேதபாடசாலைகளின் பிரதிநிதியான லகன் ப்ரம்ஹச்சாரி, சம்ஸ்கிருத வித்வான் Dr. சைலேந்திர தீக்க்ஷித், சித்ரகூட பாடசாலையின் வேதாசிரியர் வைகுந்த கெளதம், மேலும் ஹரித்வார் கங்கா மஹாசபாவைச் சேர்ந்த சுனீத் மிஸ்ரா ஆகியோருக்கு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்.  பூனா வேதபவனத்தைச் சேர்ந்த ஸ்ரீ மோரேஸ்வர் க்யஸாஸ் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காசியைச் சேர்ந்த சங்க வேத வித்யாலயாவின் வீரேஸ்வர் சாஸ்திரி திராவிட், கனேஸ்வர் சாஸ்திரி திராவிட், மற்றும் அனைத்திந்திய வித்வத் பரிஷத்தைச் சேர்ந்த காமேஸ்வர் உபாத்யாயா, காசி வித்வத் பரிஷத்தின் தலைவர் பத்மஸ்ரீ ராமயத்ன ஷுக்லா, மேலும் அனைத்திந்திய சாது சங்க சமிதியின் ஜிதேந்திரநந்த ஸரஸ்வதி ஆகியோர்கள் அனுப்பியிருந்த சிறப்பு அழைப்பிதழ்களும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு வழங்கப்பட்டன.

22 பிப்ரவரி 2021 அன்று காஞ்சி காமகோடி பீடத்தின் வழக்கப்படி ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதஸ்வாமிக்கும் பர்வதவர்தினி அம்மனுக்கும் கர்ப்பக்ரஹத்தில் அபிஷேக ஆராதனைகள் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் செய்ததையொட்டி மேற்குறிப்பிட்ட குழுவினர் காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேரில் வருகை தந்து பங்கு கொண்டு, வரவேற்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களைக் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/swagat-samaroh20210225.html

 

 

ராமேஸ்வரம் யாத்ரா - ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யா ஸ்வாமிகள் ஸ்ரீ ராமநாத ஸ்வாமி கர்ப்பக்ரஹத்தில் அபிஷேக ஆராதனை 1

22 பிப்ரவரி 2021

 

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 22 பிப்ரவரி 2021 அன்று ராமேஸ்வரத்திலிருக்கும் ஸ்ரீ ராமநாதஸ்வாமி ஆலயத்திற்கு யாத்திரை சென்று கோயில் கர்ப்பக்ருஹத்தில் ராமநாத ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார்.

அன்று காலையில் கோவில் பேஷ்கார் சர்வசதகம் வித்வானுடன் ஸ்ரீசங்கர மடத்திற்கு வந்து பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளை கோவிலுக்கு வருமாறு அழைத்தார்.  சங்கராசாரிய ஸ்வாமிகள் கோவிலுக்கு செல்லும்போது தானும் உடன் சென்றார். கோவில் கோபுர வாசலில், நமது சங்கராசாரிய ஸ்வாமிகளுக்கு கோவிலின் தக்காரான ராமநாதபுரம் ராஜ வம்சத்தினர், ஜாயிண்ட் கமிஷனர், கோவில் அதிகாரிகள், பேஷ்கார் மற்றும் கோவில் பண்டிதர்கள் அனைவரும் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்றனர்.

பண்டைய மரபின்படி, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், கர்ப்பக்ரஹத்தில் கோவில் கொண்டுள்ள ராமநாதஸ்வாமிக்கு தன் திருக்கரங்களால் கங்காபிஷேகம் செய்தார். அதன்பின்னர், ராமநாத ஸ்வாமிக்கு புதுவஸ்திரம், மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்து, தீபாராதனையுடன், 16 வகை உபசாரங்களுடன் ஆராதனை செய்து வழிபட்டார்.

மரகதக்கல் பதித்த மூன்று இதழ் வில்வஹாரம், வில்வமாலை, 108 காசுமாலை, தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்த பூணூலும் ராமநாத ஸ்வாமிக்கு அணிவித்து அர்ப்பணம் செய்தார். இதைத்தவிர, ராமநாதஸ்வாமி தேவஸ்தானத்திற்கு இரண்டு வெள்ளி வாளிகள், தீபாராதனைத்தட்டு, கும்ப ஹாரதி, 11 வெள்ளிக் கலசங்களும் ஸ்ரீமடத்தின் சார்பாக அளித்தார்.

பர்வதவர்தினி அம்மன் சன்னிதியில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆபரணங்கள் அணிவித்து, அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். அதன்பின்னர், ஸ்ரீ சேதுமாதவஸ்வாமி சன்னிதியில் வழிபட்டு, கோவிலை வலம் வந்து வழிபட்ட பின்னர், 11:45 மணியளவில் அக்னிதீர்த்தத்திலிருக்கும் ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தார். 

அன்று காலையில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தில் ஸ்ரீசந்திரமெளளீஸ்வரருக்கு பூஜை செய்தபின், ஸ்ரீமடத்தினருகில் இருக்கும் உஜ்ஜயினி காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார். 9:15 மணியளவில், நாதஸ்வர மேளம் முழங்க, வேதகோஷமிடும் வேதவித்துக்கள் கங்கைநீரை சுமந்து உடன்வர ராமநாதஸ்வாமி கோவிலுக்குச் சென்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் ராமநாதபுர ராஜ வம்ச ராஜா, ராணிமாரும், உப்பூர் ஸ்ரீ நாராயண செட்டியார், ஸ்ரீ ஓ.எஸ். மணியன், கைத்தறித்துறை மாநில மந்திரி, ஸ்ரீ எஸ். குருமூர்த்தி, ஸ்ரீ ஹெச்.ராஜா, ஸ்ரீ வேதாந்தம்ஜீ ஆகிய முக்கிய பக்தர்களுடன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டார்கள். மற்றும் ராமேஸ்வரத்திலிருக்கும் அனைத்து வேதபாடசாலை வித்வான்களும், வேதம் பயிலும் மாணாக்கர்களும், ராமேஸ்வரத்தில் வாழும் அனைத்து வேத வித்வான்களும், பண்டிதர்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். 

இந்த நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காண இங்கே சொடுக்கவும்:

https://www.kamakoti.org/kamakoti/news/2020/rameshwaram-yatra-20210223.html

ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம் - ப்ரம்ஹோத்ஸவம் - 16லிருந்து 28ஆம்தேதி பிப்ரவரி வரையில்
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தான ப்ரம்ஹோத்ஸவம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உத்ஸவம் முதல் நாள் கொடியேற்றமும், மூஷிக வாஹனத்தில் தேவி பவனியுடன் ஆரம்பித்து மற்ற பல உத்ஸவங்களுடன் தொடர்ந்து 28 தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உத்ஸவத்தின் விவரங்கள் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் காணலாம். 28ஆம் தேதி காலை விஸ்வரூபதரிசனம் நடைபெறும். அன்று மாலை வித்யார்த்தி உத்ஸவம் நடைபெறவுள்ளது. 19ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிவரையிலும் தினந்தோறும் மாலையில் நமது ஆசாரியாள் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்த ப்ரஹ்மோத்ஸவத்தின் ஒரு பகுதியாக தினந்தோறும் கோவிலில் வேதபாராயணம் நடைபெறவுள்ளது. இந்த உத்ஸவத்தின் மகத்துவத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்: https://www.kanchikamakshi.org/kamakshi-brahmotsavam-significance-and-procedure/

பிப்ரவரி மாதத்தில் ஸ்ரீ மடத்தில் விசேஷ பூஜைகள்
6 ஆம் தேதி - அனுஷ பூஜை 9 ஆம் தேதி – ப்ரதோஷ பூஜை 16ஆம் தேதி – வசந்த பஞ்சமி பூஜை 19ஆம் தேதி – ரத சப்தமி பூஜை 24ஆம் தேதி -ப்ரதோஷ பூஜை 26 ஆம் தேதி – பெளர்ணமி பூஜை 5, 12, 19, 26 ஆம் தேதிகள் – வெள்ளிக்கிழமை பூஜை

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கர மடம் பக்தா்கள் சாா்பில் ரூ. 6 கோடி நிதி
1 Feb. 2021 காஞ்சிபுரம்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சி சங்கர மடத்தின் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய தொகை ரூ. 6 கோடியை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை வழங்கினாா்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவம் - 17 முதல் 19 மார்ச் 2019 வரை
19 மார்ச் 2019 அன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில், அன்னாரது நடத்துதலில், பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முதலாவது ஆண்டு ஆராதனை ஸ்ரீமடத்திலுள்ள அவரது புனித ப்ருந்தாவனத்தில் நடைபெறவுள்ளது. 17 மார்ச் 2019 தொடங்கி ஸ்ரீமடத்தில் வேத பாராயணம், சாஸ்திர சபா, பாகவத உபன்யாஸம், மற்றும் பல்வேறு வைதீக கார்யங்கள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று ஆசார்யாளின் அனுக்ரஹத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியின் முழு விவரங்களும், சம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதைக் காணவும்.

ப்ருந்தாவன ப்ரதிஷ்டா - 10 மார்ச் 2019
பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் அன்னாரது வழிகாட்டுதல் படி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் சமாதியில் ப்ருந்தாவன ப்ரதிஷ்டா 10 மார்ச் 2019 அன்று நடைபெறும். வேத பாராயணம், ஜபம், ஹோமம் மற்றும் வேறு பல வைதீக கார்யங்களும் இந்நிகழ்ச்சியின் பாகமாக ஸ்ரீமடத்தில் நடைபெறவுள்ளது. பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆசார்யாளின் அருளாசி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் சம்ஸ்க்ருத, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான வரவேற்பிதழ் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ப்ருந்தாவனம் - காஞ்சியில் ஊர்வலம்
28 பிப்ரவரி 2018 அன்று பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் விதேக முக்தி அடைந்தார். கடந்த பன்னிரண்டு மாதங்களாக பூஜ்யஸ்ரீ ஆசார்யரின் ஆராதனை நிகழ்வுகள் வேத பாராயணங்களுடனும், பாகவத சப்தாஹங்களுடனும் நடந்து வருகின்றன. அன்னாரது சமாதி ப்ருந்தாவன ப்ரதிஷ்டை நிகழ்ச்சி 10 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது (பல்குன சுக்ல சதுர்தசி). 9 மார்ச் 2019, மாலை 4:30 மணி தொடங்கி பக்தர்கள் அஞ்சலி செலுத்த வசதியாக, பூஜ்யஸ்ரீ ஆசார்யரின் ப்ருந்தாவனம் காமாக்ஷி அம்மன் கோவில் மாடவீதிகளிலும், காஞ்சியின் ராஜ வீதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். பக்தர்கள் அனைவரும் புஷ்பாஞ்சலி செலுத்தி பூஜ்யஸ்ரீ ஆசார்யரின் அருளாசி பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பிதழ் தமிழிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கரா முதியோர் இல்லம் - க்ரோம்பேட், சென்னை
2007 இல் க்ரோம்பேட், சென்னையில் சங்கரா முதியோர் இல்லம் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் முதியோர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் மிகவும் அரிய சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளுக்கான நிழற்படங்களையும் மற்ற விவரங்களையும் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

சங்கரா முதியோர் இல்லம் - க்ரோம்பேட், சென்னை
2007 இல் க்ரோம்பேட், சென்னையில் சங்கரா முதியோர் இல்லம் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் முதியோர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் மிகவும் அரிய சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளுக்கான நிழற்படங்களையும் மற்ற விவரங்களையும் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

சங்கரா முதியோர் இல்லம் - க்ரோம்பேட், சென்னை
2007 இல் க்ரோம்பேட், சென்னையில் சங்கரா முதியோர் இல்லம் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் முதியோர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் மிகவும் அரிய சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளுக்கான நிழற்படங்களையும் மற்ற விவரங்களையும் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

சங்கரா முதியோர் இல்லம் - க்ரோம்பேட், சென்னை
2007 இல் க்ரோம்பேட், சென்னையில் சங்கரா முதியோர் இல்லம் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் முதியோர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் மிகவும் அரிய சேவைகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிகழ்வுகளுக்கான நிழற்படங்களையும் மற்ற விவரங்களையும் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

குரு சமர்ப்பணம் - கலை விழா
காஞ்சிபுரம் - 17, 18 நவம்பர் 2018 இண்டெக்ரேடட் பள்ளிகளின் ”குரு சம்ர்ப்பணம்” நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்தில் 17, 18 நவம்பர் 2018 நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆங்கில அழைப்பிதழை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

19 அக்டோபர் 2018 - காஞ்சி
நவராத்திரியில் ஸ்ரீமடம் யாகசாலையில் பல்வேறு பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெற்றன. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜியின் தலைமையில் வைதிகர்கள் யாகசாலை மந்திரங்களால் புனிதப்பட்ட தீர்த்த கலசங்களை ஏந்தி அதிஷ்டானம் சென்றனர். அதிஷ்டானத்தில் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் அபிஷேகம் செய்தபின்னர் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும். வேதாரம்பம் நடைபெற்றது நமது வழக்கத்தின்படி ஸ்ரீ சந்திரமெளளீஸ்வரர் சன்னதியில் பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் வேதாரம்பம் நடைபெற்றது. ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் கோவிலில் ஸ்ரீகாமாக்ஷி அம்பாளுக்கு தங்கரத சேவை நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல் இந்த வருடமும் நாதஸ்வர வித்வான்களின் குழுமம் தவில் வித்வான்களுடன் சேர்ந்து மங்கள வாத்யங்களும், அம்பாளின் மேல் கீர்த்தனைகளும் வாசித்து ஆராதித்தனர். வேத ரக்க்ஷண நிதித் திட்டத்தின் கீழ் வருடாந்திரப் பூர்த்திப் பரிட்க்ஷை மற்றும் பரிதோஸிகம் விருதுகளை பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தில் விஜயதசமி அன்று வெற்றி பெற்றோர்களுக்குக் கொடுத்தார். வெவ்வேறு வேதப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைகளுக்காக அமைக்கப்பட்ட விருதுகளை தகுதிவாய்ந்த வேதமாணவர்களுக்கும், அத்யாபகர்களுக்கும் வித்வான்களுக்கும் கொடுத்தருளினார்.

19 அக்டோபர் 2018 - விஜயதசமி
டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனத்தின் உதவியுடன் ஸ்ரீமடத்தின் அலுவலகத்தில் கணினி உபயோகம் துவங்கப்பட்டது. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீமடம் அலுவலகத்திற்கு வருகை தந்தபொழுது அவர் முன்னிலையில் முதல் ரசீதுச்சீட்டு அச்சிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கான் நிழற்படத்தை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

21 - 23 செப்டம்பர் 2018 - வருடாந்திர அக்னிஹோத்ர ஸதஸ்
காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராசார்ய ஸ்வாமிகளின் தெய்வீக அனுக்ரஹத்துடன் காஞ்சி ஸ்ரீமடத்தில் மூன்று நாட்கள் (21 முதல் 23 செப்டம்பர் 2018) அனைத்து இந்திய அக்னிஹோத்ரிகளின் ஸதஸ் நடைபெற்றது. அனைவரது நலனுக்கும் அக்னிஹோத்ரமும், மற்றும் அது போன்ற யாகங்களும் இன்றியமையாததாக காஞ்சி மடம் கருதுவதால், ஒவ்வொரு வருடமும் அக்னிஹோத்ரிகளின் ஸதஸ் நடத்துவதை மிக முக்கியமான நிகழ்வாக காஞ்சி ஸ்ரீமடம் சங்கராசார்ய ஸ்வாமிகள் கருதுகிறார்கள். இது 14ஆவது அக்னிஹோத்ர ஸதஸாகும். ஒவ்வொரு நாளும் இந்த ஸதஸ் காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இம்மாதிரியான யாக யக்ஞங்களை நடத்துவது குறித்த சர்ச்சைகளும், விளக்கங்களும் அக்னிஹோத்ரிகளின் புரிதலுக்கும் நடைமுறையில் கொண்டுவருவதற்கும் ஏற்ப வேதரிஷிகளின் ஸூத்ரங்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டு விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. கடைசிநாளன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அனைத்து அக்னிஹோத்ரிகளையும் ஆசீர்வதித்து அனுக்ரஹ பாஷண உரை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

சங்கரம் - யுவ சங்கீர்த்தன் - 12 செப்டம்பர் 2018
பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி உத்ஸவத்தை முன்னிட்டு 12 செப்டம்பர் அன்று ஸ்ரீமடத்தில் “சங்கரம் - யுவ சங்கீர்த்தன்” நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ மாணவியர்கள் ஆடல் பாடல்கள், பஜனைகளுடன் கலாசார கலைநிகழ்ச்சிகளை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் முன் நடத்தினர். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹ பாஷணம் கொடுத்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் ஆசீர்வதித்தார். இந்த நிகழ்ச்சியின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும்.

ஸ்ரீமடத்தில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ ப்ரனாப் முகர்ஜி வந்தனம் - 6 செப்டம்பர் 2018
6 செப்டம்பர் 2018 அன்று முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ ப்ரனாப் முகர்ஜி ஸ்ரீமடத்திற்கு வருகை தந்தார். சந்த்ரமெளளீஸ்வர பூஜை தீபாராதனையில் பங்கு கொண்ட பின்னர், பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் அதிஷ்டானத்திலும், பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்திலும் வந்தனம் செலுத்தினார். அதன் பிறகு பாதபூஜையும் செய்தார். ஸ்ரீ முகர்ஜி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யர் அவர்களின் ஆசிகளையும் பெற்றார். இந்த வருகைக்கு முன்னதாக ஸ்ரீ முகர்ஜி அவர்கள் ஏனத்தூரிலி அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயாவிற்கு வருகை தந்து, அங்கு ”ஸ்ரீ ஜெயேந்திர ப்ரஸாதம்” என்னும் புதுக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதி சங்கராசார்யாரின் திருஉருவத்திற்கும் வந்தனம் செலுத்தி ஆசி பெற்றார். அங்கிருக்கும் பனைஓலை நூலகத்திற்கும் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்குலப்பகுதியில் காணவும்.

ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடம் கலாசார மையம் - ஆர்.கே.புரம் - புது தில்லி - ஒரு வேண்டுகோள்
ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் அருளாசிகளுடன் காஞ்சி காமகோடி பீடத்தின் கலாசார மையம் புது தில்லி ஆர்.கே.புரம் ஸெக்டர் - 1 ல் (ஐயப்பன் கோவில் அருகில்) அமைக்கப்பட உள்ளது. நமது தொன்மையான கலாசாரத்தைக் காப்பாற்ற நமது தலைநகரில் ஒரு சிறப்புக் கலாசார மையம் - சிறப்புப் பொருளாதார மையம் போல் - அமைக்கப்பட வேண்டுமென்பது நமது ஆசார்யாளின் விருப்பம். கலாசார மையம் கட்டுவதற்கான பணி ஷாபூர்ஜி பாலோன்ஜி கட்டுமான நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வேத பாடசாலை, த்யான மையம், கலாசார புத்தகக்கூடம், இந்திய ஆன்மீகம் மற்றும் இலக்கிய மையம், மற்றும் சுகாதார மையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அன்பர்களும் இந்தப் பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு காஞ்சி காமகோடி பீடம் சேரிடபிள் ட்ரஸ்ட் என்ற பெயரில் அளிக்கும் அன்பளிப்புகள் வருமான வரியின் செக்.80(ஜி) (5) கீழ் தள்ளுபடி பெறத் தகுதி பெற்றது. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: பெயர் : ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆர்.கே.புரம் மையம் வங்கி : இந்தியன் வங்கி கிளை: சப்தர்ஜங் கிளை கணக்கு எண் : கரெண்ட் அக்கெளண்ட் 6371252827 IFSC : IDIB000S002 மேலும் இப்பணிக்கான விவரங்கள் தெரிந்துகொள்ள இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் க்ளிக் செய்யவும்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவம் - 29 ஜூலை 2018
29 ஜூலை 2018 - காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்திலும் மற்றும் பல இடங்களிலும், பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் அவதார தினம் அவிட்ட நக்க்ஷத்திரத்தன்று கொண்டாடப்பட்டது. விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் மற்றும் பல்வேறு கலாசார மற்றும் தெய்வீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் கலச தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அவர் முன்னிலையில் பூர்ணாஹுதி நடைபெற்றது. அதிஷ்டானத்தில் தங்க பாதபூஜையும் செய்தார். ஜயந்தி மஹோத்ஸவத்தை முன்னிட்டு சாஸ்திர சதஸும் இன்று தொடங்கியது. 31 ஜுலை அன்று சதஸ் முடிவுறும். அன்று மாலை புஷ்ப அபிஷேகம், தீபாராதனை மற்றும் ஸ்வர்ண ரதோஸ்வம் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

ஸ்வாமிமலையில் வேத பாராயணம் - ஜூலை, ஆகஸ்ட் 2018.
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்வாமிமலை வேத பாராயணம் ட்ரஸ்ட் (ரெஜிஸ்டர்ட்) ஜூலை 2018 பாராயண விவரங்கள் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத ப்ரதிஷ்டாபித மூலாம்னாய காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பரிபூர்ண வழிகாட்டுதலுடனான அனுக்ரஹத்துடன் ஸ்வாமிமலையிலும் திருவலஞ்சுழியிலும் வேத பாராயணம் நடை பெற்றது. விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: 2-7-2018 - சங்கடஹர சதுர்த்தி - ஸ்ரீ ஸ்வேதவிநாயகர் கோவில் - திருவலஞ்சுழி - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை 9-7-2018 - க்ருத்திகை - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை 17-7-2018 - சுக்ல சஷ்டி - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ரிக், க்ருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், கெளதமம் மற்றும் ஜைமினி சாமம் வேத பாராயணம் 22-7-2018 - அனுஷம் - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ரிக், க்ருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், கெளதமம் மற்றும் ஜைமினி சாமம் வேத பாராயணம் 29-7-2018 - ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி பாராயணம் - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை 31-7-2018 - சங்கடஹர சதுர்த்தி - ஸ்ரீ ஸ்வேதவிநாயகர் கோவில் - திருவலஞ்சுழி - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை ரிக்வேத நித்ய பாராயணம் - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை மற்றும் ஸ்ரீ ஸ்வேதவிநாயகர் கோவில் - திருவலஞ்சுழி - ரிக்வேத சம்ஹிதை ஆகஸ்ட் நிகழ்ச்சி 05-08-2018 - க்ருத்திகை - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை 16-08-2018 - சுக்ல சஷ்டி - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ரிக், க்ருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், கெளதமம் மற்றும் ஜைமினி சாமம் வேத பாராயணம் 19-08-2018 - அனுஷம் - ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில் - ஸ்வாமிமலை - ரிக், க்ருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், கெளதமம் மற்றும் ஜைமினி சாமம் வேத பாராயணம் 30-08-2018 - சங்கடஹர சதுர்த்தி - ஸ்ரீ ஸ்வேதவிநாயகர் கோவில் - திருவலஞ்சுழி - ப்ரம்ஹச்சாரி வித்வானகளால் ரிக் வேத சம்ஹிதை

ப்ருந்தாவனத்தில் துளளி ஸ்தாபனம்
1 ஜூலை 2018 பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் 1 ஜூலை 2018 அன்று பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவனத்தில் துளஸி ஸ்தாபன பூஜை நடத்தப்பட்டது. 29, 30 ஜூன் மற்றும் 1 ஜூலை ஆகிய நாட்களில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், சண்டி பாராயண ஜபஹோமம் ஆகியவை நடைபெற்று பூர்ணாஹூதிக்குப் பின்னர் அபிஷேகத்துடன் முடிவுற்றன. வேத கோஷங்களுக்கிடையில் மானஸரோவர் முதல் கன்யாகுமரி வரை பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் காலடி வைத்த பல க்ஷேத்திரங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட ம்ருத்திகை (மண்) அவரது ப்ருந்தாவனத்தில் இடப்பட்டது. அபிஷேகத்தீர்த்தத்துடன் அனைத்து புண்ய நதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ப்ருந்தாவனத்தில் சேர்க்கப்பட்டது. முன்னர் செய்த ஏகாதச ருத்ர ஜபஹோமம் மற்றும் சண்டி பாராயண ஹோமம் பூர்ணாஹூதியுடன் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

ப்ருந்தாவனத்தில் துளளி ஸ்தாபனம்
1 ஜூலை 2018 பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் 1 ஜூலை 2018 அன்று பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவனத்தில் துளஸி ஸ்தாபன பூஜை நடத்தப்பட்டது. 29, 30 ஜூன் மற்றும் 1 ஜூலை ஆகிய நாட்களில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், சண்டி பாராயண ஜபஹோமம் ஆகியவை நடைபெற்று பூர்ணாஹூதிக்குப் பின்னர் அபிஷேகத்துடன் முடிவுற்றன. வேத கோஷங்களுக்கிடையில் மானஸரோவர் முதல் கன்யாகுமரி வரை பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் காலடி வைத்த பல க்ஷேத்திரங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட ம்ருத்திகை (மண்) அவரது ப்ருந்தாவனத்தில் இடப்பட்டது. அபிஷேகத்தீர்த்தத்துடன் அனைத்து புண்ய நதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ப்ருந்தாவனத்தில் சேர்க்கப்பட்டது. முன்னர் செய்த ஏகாதச ருத்ர ஜபஹோமம் மற்றும் சண்டி பாராயண ஹோமம் பூர்ணாஹூதியுடன் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவன துளஸி ஸ்தாபனம்
29 ஜூன் 2018 காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இன்று ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சண்டி பாராயணம் மற்றும் ஹோமம் தொடங்கியது. பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவன துளஸி ஸ்தாபனம் 1 ஜூலை 2018 அன்று நடைபெற உள்ளது. 29,30 ஜூன் மற்றும் 1 ஜூலை 2018 அன்று ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சண்டி பாராயண ஹோம பூர்ணாஹூதிக்குப் பின்னர் அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

ஹிந்து சமய மன்றத்தின் இரண்டு நாள் ஆசிரியர் பயிற்சி முகாம்
24 ஜூன் 2018 ஏனாத்தூர் சங்கரா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் பள்ளி ஆசிரியர்களுக்கானப் பயிற்சி முகாமை ஹிந்து சமய மன்றத்தினர் நடத்தினர். இப்பயிற்சியின் கடைசி நாள் நிகழ்ச்சி காஞ்சி ஸ்ரீமடத்தில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் தந்து அவர்களை ஆசீர்வதித்தார். இந்த நிகழ்ச்சியின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

ஓரிக்கை மஹாஸ்வாமி மணிமண்டபம் கும்பாபிஷேகம் - 22 ஜூன் 2018
22 ஜூன் 2018 அன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் காஞ்சீபுரம் அருகிலிருக்கும் ஓரிக்கையில் அமைந்துள்ள பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் மணிமண்டப வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நந்தி மண்டபம் மற்றும் ராஜகோபுரத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் சமாதியில் ம்ருத்திகா சமர்ப்பணம்
2018 ஜூன் 17, 18 நமது பாரத தேசம், நேபால், கைலாஷ் மானசரோவர் முதலிய தேசங்களிலிருக்கும் முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்தும் புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட ம்ருத்திகாவை (மண்) வேத முழக்கங்களும் சங்கராசார்யாரின் ஸ்தோத்திர முழக்கங்களுடன் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் சமாதியில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஜூன் மாதம் 17, 18 தேதிகளில் சமர்ப்பித்தார். பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் தமது வாழ்நாளில் கால்நடையாகவும் வாகனங்களை உபயோகித்தும் பல இடங்களுக்கு - சார்தாம், சப்த மோக்‌ஷபுரி, சப்த நதி, த்வாதஸ ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மற்றும் பல இடங்களுக்குப் பலமுறை பயணித்திருக்கிறார் என்பதை நாம் நினைவு கூர வேண்டும். ம்ருத்திகா (மண்) சேகரிக்கப்பட்ட புண்யஸ்தலங்களின் பட்டியல் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் நிழற்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஆங்கில வலைப்பகுதியையும் பார்க்கவும்.

ஸ்வாமிமலையில் வேத பாராயணம் - மே மாத, ஜூன் மாதத் தேதிகள்
ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஸ்வாமிமலை வேத பாராயணம் ட்ரஸ்ட் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத ப்ரதிஷ்டாபீத மூலாம்னாய காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வீக அருளுடனும் ஆசிகளுடனும் ஸ்வாமிமலை மற்றும் திருவலஞ்சுழி கோவில்களில் வேத பாராயண நிகழ்ச்சிகள் மே மாதத்தில் நடைபெற்றன. இந்த மே மாத பாராயண விவரங்களும் நிழற்படங்களும் இந்த வலைத் தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும். ஜூன் மாத வேத பாராயண நிகழ்ச்சிநிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2-6-2018 சனிக்கிழமை - சங்கடஹர சதுர்த்தி - ரிக்வேத சம்ஹிதை பாராயணம் 12-6-2018 செவ்வாய்கிழமை - க்ருத்திகை - ரிக்வேத சம்ஹிதை பாராயணம் 18-6-2018 திங்கள்கிழமை - சுக்லசஷ்டி - ரிக், க்ருஷ்ண & சுக்ல யஜூர், கெளதம & ஜைமினி சாம வேதங்கள் பாராயணம் 25-6-2018 திங்கள்கிழமை - அனுஷம் - ரிக், க்ருஷ்ண & சுக்ல யஜூர், கெளதம & ஜைமினி சாம வேதங்கள் பாராயணம் பக்தர்கள் இந்த வேத பாராயண நிகழ்ச்சிகளில் பங்கேற்று வேதமாதா மற்றும் ஆசார்யர்களின் ஆசிபெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவம் - 27 முதல் 29 மே 2018 வரை
பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவம் காஞ்சிபுரம் காமகோடி பீடம் ஸ்ரீமடத்தில் மே மாதம் 27 முதல் 29 வரை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு கலாசார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் இதனையொட்டி நடைபெற உள்ளன. ஜயந்தி தினமன்று (29 மே) ஸ்ரீமஹாருத்ர பாராயண ஜப ஹோமம் காலை 7:30 முதல் நடைபெற உள்ளது. அனைத்து ஆஸ்திக ஜனங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பூஜ்யஸ்ரீ ஆசார்யாளின் ஆசிகளைப் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம். விரிவான நிகழ்ச்சி நிரல் இந்தப் பகுதியின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு ஸாதுக்களின் ஸ்ரத்தாஞ்ஜலி
3 மார்ச் 2018 உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து சாதுக்கள் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு வந்து பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள். இந்த சாதுக்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபால், ஸ்ரீலங்கா, மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதுக்களின் வருகையின் போது எடுக்கப்பட்ட நிழல்படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும்.

ஸ்ரீ சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் - 16 முதல் 20 ஏப்ரல் 2018
ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆசிகளுடன் காஞ்சி ஸ்ரீமடத்தில் ஆதி சங்கர பகவத்பாதாளின் ஜயந்தி உத்ஸவம், சங்கர ஜயந்தி ஏப்ரல் 16 முதல் 20 வரை கொண்டாடப் பட உள்ளது. இந்த உத்ஸவத்தை முன்னிட்டு வேத பாராயணம், பாஷ்ய பாராயணம், பஜனைகள், ஸ்லோக பாராயணம் மற்றும் உபன்யாஸங்கள் நடைபெற உள்ளன. 20 ஏப்ரல், வெள்ளிக்கிழமை, சங்கர ஜயந்தி அன்று காலை மஹான்யாஸம் ருத்ர ஜபத்துடன் தொடங்கவிருக்கும் உத்ஸவம் அன்று பிற்பகல் ஆசார்யாளுக்கு ருத்ராபிஷேகத்துடன் நிறைவுறும். பக்தர்கள் அனைவரும் இந்த வைபவங்களில் பங்கேற்று ஆசார்யாளின் ஆசிகளுடன் நமது குருபரம்பரையின் ஆசிகளையும் பெறுவதற்கு அழைக்கப் படுகிறார்கள். நிகழ்ச்சி நிரல் இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் பார்க்கவும்.

பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை - 13 மார்ச் 2018
காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை 13 மார்ச் 2018 அன்று காலை 9 மணியிலிருந்து நடைபெற உள்ளது.

1 மார்ச் 2018 - பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவனதில் தீபாராதனையும் பூஜையும் நடைபெற்றன
மார்ச் 1, 2018 அன்று மாலை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் 69ஆவது பீடாதிபதிகளின் ப்ருந்தாவனதிற்கு, அபிஷேகம், ஆராதனை, பூஜை தீபாராதனை செய்தார். பக்தர்கள் ப்ருந்தாவனத்திற்கு முன்னர் அமர்ந்து, பஜனைப் பாடல்கள் பாடி சங்கீத சமர்ப்பணம் செய்தனர். இந்த நிகழ்ச்சிகளின் நிழல் படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார் - 28 பிப்ரவரி 2018
சுக்ல த்ரயோதஸி - 28 பிப்ரவரி 2018 - அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது ஆசார்யர், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார். 1 மார்ச் 2018 அன்று அவரது ப்ருந்தாவன ப்ரவேச கார்யக்ரமம் ஆரம்பித்தது. பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மிகப் பெரும் வேத விற்பன்னர்களின் வேத கோஷங்களுக்கிடையில் த்ரவ்யாபிஷேகம் செய்தார். காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாட்டிலிருக்கும் கோவில்களிலிருந்து ப்ரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து திருப்பதி வேங்கடேஸ்வர ஸ்வாமி ப்ரசாதமும் வந்தது. தலைவர்களிலிருந்து பொது மக்கள் வரை அனைத்து மக்களும் தங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அதன்பின் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ருந்தாவன ப்ரவேசம் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்வாமிகளின் ஆசி பெற்ற தமிழ்நாடு ஆளுநர் ஸ்ரீ பந்வாரிலால் புரோஹித் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் நிழல் படங்களை இந்த வலைத்தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

திரிவேணி சங்கமத்திலுள்ள ஆதி சங்கர விமான மண்டபத் திருப்பணி
உத்திரப் பிரதேசத்தில் அலகாபாதிலிருக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆதி சங்கர விமான மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் திருப்பணிக்கான திட்டத்தை பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளும் ஆசி கூறி ஆரம்பிப்பதற்கான உத்தரவை அளித்துள்ளார்கள். இந்தத் திருப்பணிக்கான செலவு ரூபாய் ஒரு கோடி வரையிலாகும் என்று இதை நடத்தி வைக்க உள்ள ஸ்தபதி திரு க.ஜயேந்திர ஸ்தபதி அவர்கள் (அமரர் திரு கணபதி ஸ்தபதி அவர்களின் புதல்வர்) நமது ஆசார்யார்களிடம் கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை நடத்திவைக்க ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களான, அமரர் திரு சி.எஸ். ராமசந்திரா - ஐ.சி.எஸ் அவர்களின் புதல்வர்கள் திரு. சி.ஆர். இராஜேந்திரன் - பணி நிறைவு ஐ.ஏ.எஸ், திரு சி.ஆர்.சுந்தரமூர்த்தி - பணி நிறைவு ஐ.ஏ.ஏ.எஸ் மற்றும் திரு. ராமன் - பணி நிறைவு ஐ.ஏ.எஸ் ஆகியோர் இந்தத் திருப்பணியில் செய்யவிருக்கும் கட்டுமானம் மற்றும் மின்சாரப் பணிக்கான திட்டங்களை நமது ஆசார்யார்களுடன் பகிர்ந்து கொண்டு ஆசி பெற்றனர். காஞ்சி பரமாச்சார்யார் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் தெய்வீக ஆசிகளுடன் கட்டப்பட்டு, பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளால் 1970 -80 இல் துவக்கி வைக்கப்பட்ட இந்த ஆதி சங்கர விமான மண்டபம் , அமரர் திரு கணபதி ஸ்தபதி அவர்களால் கட்டப்பட்டது என்பதும் இதைக் கட்டுவதற்கான பொறுப்பை அமரர் திரு சி.எஸ்.ராமசந்திரன் - ஐ.சி.எஸ். அவர்கள் மேற்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த அமரர்களின் புதல்வர்கள் இந்த மண்டபத்தின் திருப்பணிக் குழுவில் தீவிரமாக வேலை செய்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் ஸகஸ்ர லிங்கம், பாலாஜி, ஆதி சங்கரர் மற்றும் ஷண்மத தெய்வங்களுக்கான சன்னிதிகளுடன் மூன்று அடுக்குக் கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் திரிவேணி சங்கமத்தின் கரையிலேயே அமைந்திருப்பதால், திரிவேணியில் ஸ்நானம் செய்து எழும் பக்தர்கள், ஸ்நானம் முடித்துத் தலை தூக்கும் போது இந்த மண்டபத்தின் மேல் சிகரத்தைப் பார்க்கும்படி அமைத்திருப்பது மிகவும் சந்தோஷத்திற்குரியது. திரிவேணியில் நீர் நிறைந்து வெள்ளமாக இருக்கும் பொழுது இந்த மண்டபத்தின் சிகரம் மட்டும் கண்ணில் படுவது, தெப்போத்ஸவம் நடப்பது போன்ற அழகான காட்சியைத் தருகிறது. இந்த மண்டபத்தில் நின்றுகொண்டு தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் கும்பமேளா நிகழ்வுகளைப் படம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 2018 டிசம்பர் முதல் 2019 ஜனவரி வரை நடைபெறவிருக்கும் அர்தகும்பமேளா தொடங்குவதற்கு முன் இந்தத் திருப்பணியை முடிக்கவேண்டும் என்பது நமது மடாதிபதிகளின் ஆவல். இந்தத் திருப்பணியில் பணம் செலுத்திப் பங்குபெற விழையும் பக்தர்கள் kanchimutt@gmail.com என்ற முகவரிக்கு எழுதி தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். பணம் செலுத்துவதற்கான மேல்விவரங்கள் விரைவில் தரப்படும். ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

காஞ்சி காமாக்ஷி அம்பாள் கோவில் ப்ரஹ்மோத்ஸவம் - 2018 பிப்ரவரி 19 முதல் மார்ச் 3 வரை
பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்யார் ஸ்வாமிகளின் தெய்வீக ஆசிகளுடன் 2018 பிப்ரவரி மாதம் 19 முதல் மார்ச் 3 வரை காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு காமாக்ஷி அம்பாள் கோவில் ப்ரமோத்ஸவம் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெறப் பிரார்த்திக்கிறோம். ப்ரமோத்ஸவத்தின் அழைப்பிதழை இந்தத் தளத்தின் ஆங்கிலப் பகுதியில் காணவும்.

பூர்வ (கிழக்கு) திருப்பதி பாலாஜி கோவில், குவஹாதி, அஸ்ஸாம் - ப்ரஹ்மோத்ஸவம் - 20 பிப்ரவி முதல் 1 மார்ச் 2018 வரை
பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்ம ற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் தெய்வீக ஆசிகளுடன் அஸ்ஸாம் குவஹாதியில் அமைந்துள்ள கிழக்கு திருப்பதி பாலாஜி கோவிலின் ப்ரஹ்மோத்ஸவம் 2018 பிப்ரவரி 20 முதல் மார்ச் மாதம் 1 வரை விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஹோமங்களும், வேத பாராயணமும் நடைபெறவுள்ளன. பாலாஜியும் தாயாரும் மிக விசேஷ அலங்காரங்களுடன் சேவை சாதிக்க உள்ளனர். அனைத்து பக்தர்களும் இந்த ப்ரஹ்மோத்ஸவத்தில் பங்கு கொண்டு பெருமாள் தாயாரின் அருளுக்குப் பாத்திரராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ப்ரஹ்மோத்ஸவத்தின் அழைப்பிதழ் ஆங்கில செய்திப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

பரஸுராம் குண்ட் யாத்திரை - அருணாசல் பிரதேசம் - 11 முதல் 16 ஜனவரி 2018
காஞ்சி ஸ்ரீமடத்தின் 69ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் 70ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மகர சங்கராந்தி பண்டிகைக்காலத்தில் அருணாசல் பிரதேசத்திலிருக்கும் பரஸுராம் குண்ட் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரை ஜனவரி 11 முதல் 16 வரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் ஒரு முக்கிய அம்சமாக, யாத்ரிகள், பொங்கல் பண்டிகையை நமது சம்பிரதாய முறையில் பொங்கல் பானை வைத்து, கோலம், கும்மி நடனத்துடன் சிறப்பாகக் கொண்டாடினர். இந்த யாத்திரையின் நிழல் படங்களை ஆங்கிலப் பகுதியில் காணலாம்.



2015

ஸ்ரீமடம் முகாம்
11 ஜூன் முதல் - தமிழ்நாடு -ஆந்திரா எல்லையில் திருத்தணி அருகே அமைந்துள்ள பொன்பாடி கிராமத்தில்

5 ஜூன் முதல் - வேதபாடசாலை,நெமிலிச்சேரி, குரோம்பேட்டை,சென்னை:

மே 12 வரை- புதுச்சேரி லாஸ்பேட் ஸ்ரீசங்கர வித்யாலயாவில்

வைகானச பாடசாலை - கட்டட திறப்பு விழா - 4 ஜூன் - ஆவடி , சென்னை

சென்னையில் மஹாஸ்வாமிகளின் 122வது ஜெயந்தி விழா - 2 Jun. 2015
காஞ்சி சங்கராச்சர்ய சுவாமிகள் பங்கேற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் 1 May 2015
சிதம்பரத்தில் ஸ்ரீமடம் முகாம் 30 April 2015
திரிச்சூரில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்
திருப்பதியில் நடைபெற்ற மகாலக்ஷ்மி யாகம்
 
2013
சுவாமிமலையில் வேதபாராயணம் - 12 ஆகஸ்ட் 2013
ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் தமிழ்ப்பாடசாலை
தமிழ் பாடசாலை துவக்க விழா - 21 July 2013
உத்தரகண்ட் மாநில மக்கள் இடர்தீர்க்கும் பணியில் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
ஆதிசங்கர ஜெயந்தி விழா - 11 - 15 May 2013
ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் - 23 மார்ச் 2013 - சென்னை
பூஜ்யஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் - 22 மார்ச் 2013 - காஞ்சிபுரம்
ஸ்வாமிமலையில் வேத பாராயணம்-2013
67ஆவது ஆசார்ய சுவாமிகளின் ஆராதனை 12 மார்ச் 2013 அன்று நடைபெற்றது
காஞ்சிப்புராணம் - தொடர் சொற்பொழிவு- மார்ச், ஏப்ரல் 2013
2012
திருக்கோயில் வழிபாட்டுக்குழு- கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஸ்ரீ பர்வதமலை கிரிவலம் - 16 டிசம்பர் 2012
ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள் அவர்களின் 19-வது ஆராதனை மஹோத்சவம் -6-8 ஜனவரி 2013
வேத பூர்த்தி பரிக்ஷை சான்றிதழ் வழங்கப்பட்டது - 24 அக்டோபர் 2012
சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திர், புது டெல்லி , அக்டோபர் 16 - 24, 2012
சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ பங்காரு காமாக்ஷி கோவில், தஞ்சாவூர் , அக்டோபர் 15 - 23, 2012
விஜயதசமி - ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலுக்கு விஜயம் – 24 அக்டோபர் 2012
நவராத்திரி மஹோத்சவம் – ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ அத்ய சங்கரா மந்திர், பூனா - அக்டோபர் 16 – 24, 2012
சாரதா நவராத்திரி மஹோத்சவம் - ஸ்ரீ சங்கரா மந்திர், செகண்டராபாத் , அக்டோபர் 16 - 24, 2012
ஸ்ரீமடத்தில் சாரதா நவராத்திரி மஹோத்சவம் அக்டோபர் 16 – 24 2012
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம் காஞ்சிபுரம் -ஸ்ரீ சாரதா நவராத்ரி மஹோத்சவம் 
திருக்கோவில் வழிபாட்டு குழு சந்திப்பு
வேத சம்மேலன் நிகழ்ச்சி, திருவான்மியூர், சென்னை - அக்டோபர் 4 - 7 2012
ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் விஜய யாத்திரை – 30 செப்டம்பர், 2012
கணேஷ் சதுர்த்தி மஹோத்சவம் உத்தர சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மந்திர் சதாரா – 19 – 23, செப்டம்பர், 2012
வேத சம்மேலன் நிகழ்ச்சி, ஆவடி, சென்னை - செப்டம்பர் 20 - 23 2012
ஸ்வாமிமலையில் வேத பாராயணம் – ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 24, 2012
திருக்கோவில் வழிபாட்டுக் குழு அட்டவணை - ஆகஸ்ட்-அக்டோபர் , 2012
ரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடைபெற்றது -ஆகஸ்ட் 1,2 - 2012
பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 78வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது- 3 ஆகஸ்ட்,2012
திருக்கோவில் வழிபாட்டுக் குழு அட்டவணை - ஜூன் – ஆகஸ்ட், 2012
ஸ்ரீமடத்தில் அக்னிஹோத்ர சதஸ் நடைபெற்றது - ஜூலை 13 – 15, 2012
காஞ்சி ஆகம மாணவர்கள் அபிஜ்நா சமஸ்க்ருத சான்றிதழ்களை பெற்றனர் - ஜூலை, 17, 2012
செக்கந்தராபாத்தில் புஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா
புஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 78 வது ஜெயந்தி விழா - 1 முதல் 3 Aug 2012 வரை
பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் வியாசர் பூஜை நடத்தினார்கள் - 3 July 2012
ஸ்வாமிமலையில் வேத பாராயணம் – ஜூன் 3, 2012
பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 119 ஜெயந்தி மஹோத்சவ விழா
காஞ்சி சங்கர மடத்தில் வேத சப்தாஹம் - 6 Apr 2012 முதல் 12 Apr 2012 வரை
கோமன்தக் திருப்பதி பாலாஜி மந்திர் கும்பாபிஷேகம் - 15-19 மார்ச் 2012
விஜய ரத சாந்தி சம்வத்சர மஹோத்சவம் - சமஷ்டி உபநயனம் மற்றும் விவாஹம் 17-28 பிப்ரவரி 2012
திருகோவில் வழிபாட்டுக் குழு - சந்திப்பு
ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் சங்கர நேத்ராலயாவின் நடமாடும் கண் மருத்துவ திட்டதை பார்வையிட்டு வாழ்த்துதல
ஓரிக்கை மணிமண்டபம் - சம்வத்சர அபிஷேக வைபவம-19 ஜனவரி 2012

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜியின் - 44 வது ஜெயந்தி விழா - 19 Feb 2012

66வது ஆசார்ய ஸ்வாமிகளின் ஆராதனை
ஸ்ரீமடத்தில் "மாட்டு பொங்கல்" மிக விசேஷமாக கொண்டாடப்பட்டது - 16 ஜனவரி 2012