வேத பூர்த்தி பரிக்ஷை சான்றிதழ் வழங்கப்பட்டது - 24 அக்டோபர் 2012

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சிபுரம், ஸ்ரீமடத்தில் விஜயதசமி அன்று வருடாந்திர வேத ரக்ஷண நிதி அறக்கட்டளை சார்பாக வேத பூர்த்தி பரீக்ஷை  சான்றிதழ் வழங்கினார்கள். 

வேத பிரிவுகளில் பல்வேறு நிலையில் சிறந்து திகழும் மாணவர்களுக்கும், அத்யாபகர்களுக்கும், மேதைகளுக்கும் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அநுக்ரஹ   பாஷணம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி மற்றும் சங்கர ஜெயந்தி அன்று இந்தச் சான்றிதழ்கள்  வழங்கப்படுவது வழக்கம். 

கீழே உள்ள புகைப் படத்தில் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வதையும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காண்பீர்கள்.

 


மேலும் செய்திகள்