இயல் சாத்து (தென்கலை ஸம்ப்ரதாயம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ

ஸ்ரீ மதே ராமாநுஜய நம

இயல் சாத்து (தென்கலை ஸம்ப்ரதாயம்)

நன்று திருவுடையோம் நானிலத்தி லெவ்வுயிர்க்கும்

ஒன்றும் குறையில்லையோதினோம்,-குன்ற

மெடுத்தா னடிசே ரிராமாநுசன்றாள்,

பிடித்தார் பிடித்தாரைப் பற்றி.

வாழிதிருக்குருகூர் வாழி திருமழிசை,

வாழிதிரு மல்லி வளநாடு, - வாழி

சுழிபொறித்த நீர்ப்பொன்னித் தென்னரங்கன் றன்னை,

வழி பறித்த வாளன் வலி.

திருநாடு வாழி திருப்பொருநல்வாழி,

திருநாட்டுத் தென்குருகூர்வாழி,-திருநாட்டுச்

சிட்டத் தமர்வாழி வாழி சடகோபன்,

இட்டத் தமிழ்ப்பா விசை.

மங்கைநகர் வாழி வண்குறையலூர் வாழி,

செங்கை யருள்மாரி சீர்வாழி,-பொங்கு புனல்

மண்ணித் துறைவாழி வாழி பரகாலன்,

எண்ணில் தமிழ்ப்பாவிசை.

வாழியரோ தென்குருகை வாழியரோ தென்புதுவை,

வாழியரோ தென்குறையல், மாநகரம் - வாழியரோ,

தக்கோர் பரவும் தடஞ்சூழ் பெரும்பூதூர்,

முக்கோல் பிடித்தமுனி,

மொழியைக் கடக்கும் பெரும்புக ழான்,வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும்நங் கூரத்தாழ் வானசரண் கூடியபின்,

பழியைக் கடத்து மிராமா நுசன்புகழ் பாடியல்லா

வழியைக் கடத்தல், எனக்கினி யாதும் வருத்தமன்றே.

நெஞ்சத்திருந்து நிரந்தரமாக, நிரயத்துய்க்கும்

வஞ்சக் குறும்பின் வகையறுத் தேன்,மாய வாதியர்தாம்

அஞ்சப்பிறந்தவன் சீமா தவனடிக் கன்புசெய்யும்

தஞ்சத் தொருவன், சரணாம் புயமென் தலைக்கணிந்தே.

ஊழிதொறு மூழிதொறு முலக முய்ய

வும்பர்களும் கேட்டுய்ய, அன்பினாலே

வாழியெனும் பூதம் பேய் பொய்கை மாறன்

மழிசையர்கோன் பட்டர்பிரான் மங்கை வேந்தன்,

கோழியர்கோன் தொண்டர்துகள் பாணன் கோதை

குலமுனிவன் கூறியநூ லோதி - iF

வாழியென வரும்திரளை வாழ்த்து.வார்தம்

மலரடியென் சென்னிக்கு மலர்ந்த பூவே.


சாற்றுமுறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு,

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா,உன்

சேவடி செவ்விதிருக் காப்பு!

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு,

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,

வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு,

படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா

ராமா நுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்,

ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா

திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ.

ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய

ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய.

நமஸ்ஸ்ரீஸைலநாதாய குந்தீநகரஜந்மநே

ப்ரஸாதலப்தபரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே.

ஸ்ரீஸைலேஸ-தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.

வாழி திருவாய் மொழிப்பிள்ளை மாதகவால்

வாழும், மணவாள மாமுனிவன் - வாழியவன்

மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர்

தேறும் படியுரைக்கும் சீர்.

செய்ய தாமரைத் தாளிணை வாழியே,

சேலை வாழி திருநாபி வாழியே,

துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,

சுந்தரத்திருத்தோளிணை வாழியே,

கையுமேந்திய முக்கோலும் வாழியே,

கருணை பொங்கிய கண்ணினை வாழியே,

பொய்யிலாத மணவாள மாமுனி

புந்திவாழி புகழ்வாழி வாழியே !

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,

சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,-கடல் சூழ்ந்த,

மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,

இன்னுமொரு நூற்றாண் டிரும்.


ஆண்டாள் வாழித்திருநாமம்

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடம் தோன்றுமூர்,-நீதியால்

நல்லபத்தர் வாழுமூர், நான்மறைக ளோதுமூர்,

வில்லிபுத்தூர் வேதக்கோ னூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்,

வேத மனைத்துக்கும் வித்தாகும், - கோதைதமிழ்

ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை,

வையம் சுமப்பதூஉம் வம்பு.

திருவாடிப் பரூத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இயல் காற்று (வடகலை ஸம்ப்ரதாயம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஸ்ரீரங்கம்
Next