ஸ்ரீரங்கம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

ஸ்ரீரங்கம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக. "கோயில்" என்ற சிறப்புப் பெயருடன் விளங்குவதும், காவிரி - கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்திருப்பதுமான இவ்வூர், திருச்சி, விழுப்புரம் கார்டுலைனில் உள்ள ஸ்ரீ ரங்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து முக்கால் மைல் தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து டவுன் பஸ்ஸில் சென்றால் கோவில் தெற்கு கோபுர வாசலிலேயே

இறங்கலாம். இங்கு, சத்திரங்கள், ராமாநுஜ கூடங்கள், சாப்பாட்டு ஹோட்டல்கள் முதலிய எல்லா வசதிகளும் உண்டு.


மூலவர் - ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன்) - புஜங்கசயனம் (ஆதிசேஷ சயனத்திருக்கோலம்) , தெற்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - நம்பெருமாள் என்ற சிறப்புப் பெயருடன் நின்ற திருக்கோலம்.

தாயார் - ஸ்ரீ ரங்கநாயகி (ரங்க நாச்சியார்)

தீர்த்தங்கள் - சந்த்ரபுஷ்கரிணி, காவேரி, கொள்ளிடம், வேதச்ருங்கம்

ஸ்தல வ்ருக்ஷம் - புன்னை

விமானம் - ப்ரணவாக்ருதி

ப்ரத்யக்ஷம் - தர்மவர்மா, ரவிதர்மன், சந்த்ரன், விபீஷணன்.

விசேஷங்கள் - பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை - பிள்ளை லோகாசார்யர்,

பெரிய நம்பி - இவர்களின் அவதாரஸ்தலம். இது தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவன கைங்கர்யமும் திருமங்கை ஆழ்வார் திருமதிள் கைங்கர்யமும் செய்த இடம். ஸ்ரீ மந்நாதமுனிகளால் திவ்யப் பிரபந்தத்தை ராகதாளங்களுடன் பாடும் முறை "அரையர் ஸேவை" என்ற பெயரில் இங்கு நடந்து வருகிறது. ஸ்ரீ ஸ்வாமி தேசிகனுக்கு பெரிய பெருமாள் "கவிதார்க்கித ஸிம்ஹம்" என்றும், தாயார் "ஸர்வதந்த்ஸ்தந்த்ரர்" என்றும், பிருதங்கள் வழங்கிய ஸ்தலம். இப்பெருமானின் பாதுகைகள்மீதுதான் "பாதுகாஸஹஸ்ரம்" என்ற உயர்ந்த காவியத்தை ஸ்ரீதேசிகன் இயற்றினார். நம்பெருமாளின் திவ்யாக்ஞையின்படி ஸ்ரீ மணவாளமாமுனிகள் இந்த ஸன்னிதியில் திருவாய்மொழி காலேக்ஷபேம்ஸாதித்தார். நம்பெருமாள், பகவத்விஷயசாற்றுமறைக்ஷயன்று குழந்தையாக வந்து நின்று ஸ்ரீ சைலேச தயாபாத்ரதனியனை அருளிச் செய்து மணவாளமாமுனிவருக்குப் பஹ§மானமாக

அளித்தார். இது ஒரு தனிச்சிறப்பு. இந்த ஸ்தலத்தை பூலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். ஸமீபத்தில் ஸ்ரீ அஹோபிலஜீயர் தீவிர முயற்சியால் தெற்கு வாசலில் பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகின்றது. ஏராளமான பொருட்செலவில் கட்டப்படும் இந்த கோபுரம் பூர்த்தியானால் இந்தியாவிலேயே இது மிக பெரிய கோபுரமாக திகழும். வடக்குபக்கப் பரமபத வாசலில் வரஜநதி

இருப்பதாக ஐதீஹம். கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது சிரக்கம்பம் செய்து ஆமோதித்து "மேட்டு அழகிய சிங்கம்" என்னும் ஸ்ரீ நரஸிம்மமூர்த்தி இங்கு கோவில் கொண்டுள்ளார். இது தாயார் ஸந்நிதி நுழைவாசலில் உள்ளது.

வேறெங்கும் காணப்படாத ஸ்ரீ தன்வந்தரி பகவானின் ஸந்நிதி இங்குள்ளது. இது பரமபத வாசலுக்கு வடக்கிலும், சந்த்ரபுஷ்கரணிக்கு மேற்கிலும் உள்ளது. மற்றும் சக்கரத்தாழ்வார், பெரிய கருடாழ்வார் ஸந்நிதி இரு பக்கங்களிலும் வேறு எங்கும் காணப்படாத சுக்ரீவன், அங்கதன் ஸந்நிதிகளும் இருக்கின்றன. மூலவர் ரங்கநாதர் கர்ப்பக்ருஹத்தின் மேல் தங்க விமானத்தில் தென்பக்கம் பரவாஸுதேவர் தங்க விக்ரஹம் உள்ளது. ஸ்ரீரங்கநாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது தங்க விமானத்தையும் பரவாஸதேவரையும் ஸேவிக்கும் வழக்கம் உள்ளது.

நம்பெருமாளை ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்ட ஆசாரியர்கள் ராமானுஜர் ஆழ்வான் ஆண்டான எம்பார் பட்டர் பிள்ளை லோகாசாரியார் முதலிய ஆசாரியர்களும் மங்களாசாஸனம் செய்துள்ளார்.

மங்களாசாஸனம் - பத்து ஆழ்வார்களும ஆண்டாளும் (மதுரகவி ஆழ்வாரைத் தவிர)

பெரியாழ்வார் - 183, 189, 212, 245, 402 - 432

ஆண்டாள் - 607 - 616

குலசேகராழ்வார் - 647-676, 728

திருமிழிசையாழ்வார் - 772, 800-806, 844, 870, 2384, 2411, 2417, 2441

தொண்டரடிப்பொடியாழ்வார் - 872 - 926

திருப்பாணாழ்வார் - 927-936

திருமங்கையாழ்வார் - 1019, 1213, 1378-1427, 1506, 1571, 1664, 1829, 1978, 2029, 2038, 2043, 2044, 2050, 2062, 2063, 2065, 2069, 2070, 2073 - 76, 2673 (71) , 2674 (118)

பொய்கையாழ்வார் - 2087

பூதத்தாழ்வார் - 2209, 2227, 2251, 2269

பேயாழ்வார் - 2342, 2343

நம்மாழ்வார் - 2505, 3348-58

மொத்தம் 247 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இயல் சாத்து (தென்கலை ஸம்ப்ரதாயம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி, உறந்தை)
Next