ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்திரம்)
திருச்சியிலிருந்து துறையூர் போகும் பஸ் பாதையில் சுமார் 13 மைல் தூரத்தில் உள்ளது. டவுன் பஸ்களும் செல்கின்றன. ஸ்ரீ ரங்கத்திலிருந்து உத்தமர்கோவில் வழியாகவும் பஸ்ஸில் போகலாம். இங்கு வசதிகள் எதுவுமே இல்லை. திருச்சியிலேயே தங்கி ஸேவித்துவிட்டு திரும்பிப்போகலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான இக்கோயில், பஸ் பாதையிலிருந்து சுமார் ஒன்றரை ஃபர்லாங் தூரத்தில் உள்ளது.
மூலவர் - புண்டரீகாக்ஷன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - செண்பகவல்லி. பங்கயச்செல்வி, தனிக்கோவில் நாச்சியார் ஸந்நிதி உண்டு. உதஸவத்தாயாருக்கு பங்கஜவல்லி என்று திருநாமம்.
தீர்த்தம் - மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன. திவ்ய கந்த க்ஷீரபுஷ்கரிணிகள், குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ மணிகர்ணிகா.
விமானம் - விமலாக்ருதி விமானம்.
ப்ரத்யக்ஷம் - பெரிய திருவடி, CH, பூதேவி, மார்க்கண்டேயர், லக்ஷ்மி, ப்ருஹ்மருத்ராதிகள்.
விசேஷங்கள் - உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை ஸேவிக்க செல்ல வேண்டும். இரவில் நேரங்கழித்து வந்த பெருமாளைத் தாயார் "ஏன் இவ்வளவு நேரம்" என்று கேட்டதைக் குறிக்கும் வகையில், "நாழி கேட்டான் வாசல்" என்று ஒரு வாசலுமுண்டு. ஸ்ரீதேவி, பூதேவி, ஸ¨ர்ய சந்திரர்கள், ஆதிசேஷன் - இவர்கள் மனித உருவில், பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது இந்த ஸந்நிதியின் தனிச்சிறப்பு. இந்த ஸந்நிதியின் தனிச்சிறப்பு. இந்த க்ஷேத்திரத்தின் ஸகல ஆதித்யமும் பங்கயச் செல்வியினுடையது. உய்யக்கொண்டார் அவதாரஸ்தலம் இதுவே. நடாதூரம்மாளுக்கு "ஒப்பாரும் மிக்காரும் இல்லை" எனும் புகழ்மாலையை சூட்டும்படி க்ருபை பண்ணிய மகாநுபவரான எங்களாழ்வான் அவதரித்த ஸ்தலம். உடையவர் வைஷ்ணவத்தை வளர்க்க வாஸம் செய்த ஸ்தலம். ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஹம்ஸஸந்தேசத்தில் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம். ஸ்ரீ மணவான மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த இடம்.
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 71, 192-201,
திருமங்கையாழ்வார் - 1368-77, 1851, 2673 (70) 2674 (117)
மொததம் 24 பாசுரங்கள்.