ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருஅன்பில் (அன்பில்)
திருச்சி - கல்லணை கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் உள்ளது.
திருச்சியிலிருந்து இவ்வூருக்கு பஸ் வசதி உண்டு. ஆனால் பஸ் அடிக்கடி போவதில்லையாகையால் சற்று இப்பால் உள்ள நடராஜபுரம் என்ற ஊருக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து 1/2மைல் நடந்து, அன்பில் அடையலாம்.
திருச்சி-விழுப்புரம் கார்டுலைனில் உள்ள லால்குடி ஸ்டேஷனில் இறங்கி வண்டி மூலம் (5 மைல்) வரலாம். இங்கு, சத்திரங்கள், ஹோட்டல்கள் முதலிய வசதிகள் ஒன்றுமில்லை. கொள்ளிடத்தின் அக்கரையில் உள்ள கோவிலடியிலிருந்தும் நதியைக் கடந்து வரலாம். திருச்சியில் தங்கி பஸ்ஸில் வந்து ஸேவித்து விட்டுத் திரும்பலாம்.
மூலவர் - வடிவழகிய நம்பி, புஜங்கசயனம் கிழக்கே. திருமுக மண்டலம்.
உத்ஸவர் - ஸுந்தரராஜன்.
தாயார் - அழகியவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - மண்டூகபுஷ்கரிணி, கொள்ளிடம்.
விமானம் - தாரக விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, வால்மீகி.
விசேஷம் - இக்கோயிலில் கல்வெட்டுகள் பலவுள்ளன.
மங்களாசாஸனம் -
திருமழிசையாழ்வார் - 2417 - 1பாசுரம்.