ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)
திருநாகேச்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. ஆனால் வாஹன வசதி குறைவு. கும்பகோணத்திலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தை டவுன் பஸ்ஸிலும், வெளியுர் பஸ்களிலும் போவதே ஸெனகரியமானது.
மூலவர் - ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - பூமி தேவி (பூமி நாச்சியார் என்ற திரு நாமத்துடன்) பெருமாளுக்கு வலதுபுறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலம் (தனிக்கோயில் இல்லை) .
தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.
விசேஷங்கள் - திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். மருகண்டு மஹரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாம்நிவேதனம் - எனவே இக்கோவில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. அதனால் பெருமாள் "உப்பிலியப்பன்" என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பெருமாளை ஸேவிக்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்கிறார்கள், நரகத்திற்கு ஆளாவார்கள் என்று புராணம் கூறுகிறது.
குறிப்பு - இந்தக் கோயிலில் பிறார்த்தனைத் திருக்கல்யாண உத்ஸவம், கருடஸேவை, மூலவர் திருமஞ்சனம் முதலியன தேவஸ்தானத்துக்கு உரியதொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பங்குனிமாதம் ப்ரும்ஹோத்ஸவமும், ஐப்பசிமாதம் கல்யாண உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.
மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார் - 1448-77, 1855, 2080, 2673 (72) , 2674 (113)
பேயாழ்வார் - 2342, 2343
நம்மாழ்வார் - 3249-59
மொத்தம் 47 பாசுரங்கள்.