திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்)

கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோவில் சுமார் 1 1/2 மைல் தூரம். இந்த ஊரில் ஹோட்டல், சத்திரம் முதலிய பல வசதிகளும் உண்டு. பல ஊர்களிலிருந்தும் பஸ்கள் வருகின்றன.

மூலவர் - இவருக்கு சாரங்கபாணி, ஆராவமுதன், அபர்யாபதாம்ருதன், என்று பல பெயர்கள், ஆதிசேஷசயனம் (உத்தியோக சயனம்) , கிழக்கே திருமுக மண்டலம், திருமழிசையாழ்வாருக்காகக் 'கிடந்தாவாறெழுந்' திருக்க முயலும் நிலையிலிருப்பதால் 'உத்தாநசாயீ' என்றும் அழைக்கப்படுகிறார்.

தாயார் - கோமளவல்லி (படிதாண்டாப்பத்தினி)

தீர்த்தம் - ஹேமபு ¢ஷகரிணி 'பொற்றாமரை) , காவிரிநதி, அரசலாறு

விமானம் - வைதிக விமானம் (வேத வேத விமானம்) .

ப்ரத்யக்ஷம் - ஹேமமஹரிஷி.

விசேஷங்கள் - பெருமாளுக்கெதிரே நதிதேவதைகள் வணங்குகின்றனர். இங்கேதான், ஸ்ரீமந்நாதமுனிகள் "ஆராவமுதே" என்று தொடங்கும் திருவாய்மொழிகளைக் கேட்டு, திவ்யப்ரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார்.

ஹேமரிஷியின் புத்ரியாகத் தோன்றித் தவம் புரிந்த கோமளவல்லித் தாயாரை மணந்ததாக ஐதீஹம்.

பெருமாளின், அழகிய, பெரிய சித்திரைத்தேர் உலக ப்ரஸித்தி பெற்றது. பெருமாள் ஸந்நிதியே தேர் சக்கரங்களுடன் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது.

ராமஸ்வாமி கோவிலும் சக்ரபாணி கோவிலும் இவ்வூரில் உள்ளன. சக்கரபாணி அஷ்ட புஜங்களுடன் விளங்குகின்றார். இவருக்கும் இவரது தமையனாரெனக் கருதப்படும் சாரங்க பாணிக்கும் சேர்ந்து பல உத்ஸவங்கள் நடக்கின்றன. ராமஸ்வாமி கோவிலில் ராமன் பட்டாபிஷேக காட்சியில் பரதசத்ருக்ன லஷ்மணன் ஸீதை எல்லோரும் சாமர குடையின்கீழ் வெண்சாமரை வீசிக்கொண்டிருப்பதைக் காணலாம். ஆஞ்சநேயர் வீணாகானம் செய்து கொண்டு ராமாயண பாராயண புஸ்தகத்துடனும் காணப்படுகிறார். கோவில் பிராகாரத்தில் சித்திர ராமாயணத்தை வண்ணத்தால் வரைந்திருக்கிறார்கள். சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருள்கள் அமைந்துள்ள (அமிர்தகும்பம்) குடம் இங்கு தங்கியமையால் திருக்குடந்தை என்ற பெயர் பெற்றது.

குறிப்பு - ஆழ்வார்கள் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் நிலைநிறுத்திய ஸ்ரீ ஆராவமுதப் பெருமாளுக்கு, ஸ்ரீ மந்நாத முனிகள், "ஆராவமுதாழ்வான்"

என்ற திருநாமம் சாற்றியருளினார்.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 173, 177, 188

ஆண்டாள் - 628

திருமழிசையாழ்வார் - 807-812, 2417

திருமங்கையாழ்வார் 949, 954, 991, 1078, 1202, 1205, 1394, 1526, 1538, 1570, 1606, 1606, 1732, 1759, 1853, 1949, 1975, 2010, 2037, 2045, 2068, 2070, 2080, 2672, 2673 (73) , 2674 (114)

பூதத்தாழ்வார் - 2251, 2278

பேயாழ்வார் - 2311, 2343

நம்மாழ்வார் - 3194-3204

மொத்தம் 51 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திரு ஆதனூர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)
Next