திருச்சேறை (பஞ்சஸாரக்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருச்சேறை (பஞ்சஸாரக்ஷேத்ரம்)

நாச்சியார் கோவிலில் இருந்து 3 மைல், கும்ப கோணத்திலிருந்து தென் கிழக்கில் 7 மைல் தூரத்தில் உள்ள இவ்விடத்திற்கு டவுன் பஸ் மூலம் செல்லலாம். சத்திரம் ஹோட்டல்களும் உண்டு. குடவாசல் என்கிற டவுன் மிக அருகில் உள்ளது.

மூலவர் - ஸாரநாதன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - ஸார நாயகி (ஸார நாச்சியார்) .

தீர்த்தம் - ஸாரபுஷ்கரணி.

விமானம் - ஸார விமானம்.

ப்ரத்யக்ஷம் - காவேரி, மார்க்கண்டேயன்.

விசேஷங்கள் - பெருமாள் காவேரியம்மனக்கு ப்ரத்யக்ஷம். குளக்கரையில் காவேரியம்மனுக்கு ஒரு ஸந்நிதி உள்ளது. ராஜகோபாலஸ்வாமி ஸந்நிதியும் உள்ளது. இந்த ஊரில் தைப்பூசத்தன்று தேரில் பெருமாள் 5 தாயார்களுடன் காட்சி கொடுப்பது சிறந்த விசேக்ஷம் (ஸ்ரீ தேவி, பூதேவி, நீலாதேவி, மஹா லஷ்மி, ஸார நாயகி) . ப்ரளய காலத்தில் இவ்வூரின் கெட்டியான மண்ணைக் கொண்டு ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்துக் காப்பாற்றப்பட்டதாகப் புராண வரலாறு. புஷ்கரிணி மேற்குக் கரையில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இவர் மிகவும் வரப்ரஸாதி என்று ஸ்தல வரலாறு. ஸாரபுஷ்கரணியில் நீராடி பெருமாள் தாயாரை வழிப்பட்டால் எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறும் என்பதாக ஐதீஹம்.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1578-87, 1853, 2673 (72) , 2674 (115)

மொத்தம் 13 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருநறையூர் (நாச்சியார் கோயில்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கண்ணமங்கை (க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம்)
Next