ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருத்தஞ்சை மாமணிக் கோயில்
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 2 1/2 மைல் தூரத்தில் வெண்ணாற்றங்கரையில் உள்ளன இத்திருக்கோவில்கள். இதற்கு அருகாமையில் ஒரே ஒரு திவ்ய தேசம்தான் இருப்பதால் மைய இடமான கும்பகோணத்திலிருந்தே இதை ஸேவிக்கலாம். கும்பகோணம் தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் டவுன் பஸ்ஸில் வரலாம். மூன்று கோவில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகப் பாடல் பெற்றுள்ளன மூன்றும் அருகருகே 1 பர்லாங் தூரத்துக்குள் உள்ளன.
1. தஞ்சை மாமணிக் கோவில்
மூலவர் - நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - செங்கமலவல்லி.
தீர்த்தம் - அம்ருத தீர்த்தம், கன்னிகாபுஷ்கரிணி, வெண்ணாறு.
விமானம் - ஸெனந்தர்ய விமானம்.
ப்ரத்யக்ஷம் - பராசரமுனி.
2. மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - அம்புஜவல்லி.
தீர்த்தம் - ஸ்ரீ ராம தீர்த்தம்.
விமானம் - மணிக்கூட விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர்.
குறிப்பு - திவ்யப் பிரபந்தம் ஸேவிக்கக்கூடாத அனத்யயன காலத்தில், தேசிகப் பிரபந்தத்தை எல்லா திவ்ய தேசங்களிலும் ஸேவிக்க வேண்டும் என்று நயினாராசார்யர் ஸ்வாமி நியமித்த திவ்யதேசம்.
3. தஞ்சையாளி நகர்
மூலவர் - நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - தஞ்சை நாயகி.
தீர்த்தம் - ஸ¨ர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம்.
விமானம் - வேதஸுந்தர விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர்.
மூன்று கோவில்களிலும் உத்ஸவர் பெயர் ஸ்ரீ மந்நாராயணன்தான்.
விசேஷம் - பகவான் தஞ்ச யானையைப் பிளக்க நரஸிம்மாவதாரம் எடுத்து நகங்களால் குத்தி கிழத்தபோது, தஞ்சகன் வேண்டிக்கொண்டபடி நரஸிம்ம உருவத்தோடு ஸேவை ஸாதிப்பதால் தஞ்சாபுரி அல்லது தஞ்சை என்ற பெயர் உண்டாயிற்று. தஞ்சையைப் பார்த்தபடி விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், 'தஞ்சையைக் காத்தருளும் தெய்வம்' என வழங்கப்படுகிறது.
குறிப்பு - மூன்று ஸந்நிதிகளும் ஒரே அர்ச்சகர் ஆனபடியால் வெண்ணாற்றங்கரையில் உள்ள அவர் க்ருஹத்தில் அவரை ஸந்தித்தால் இரவைத் தவிர மற்ற வேளைகளில் ஸேவை செய்து வைப்பார். 'அஞ்சை மாமணியைப்' போற்றிடுக.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 953, 1090, 1576
பூதத்தாழ்வார் - 2251.
நம்மாழ்வார் - 3139.
மொத்தம் 5 பாசுரங்கள்