ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருநாகை (நாகப்பட்டினம்)
இங்கு வசதிகள் இருந்தும், அதிக ஸ்தலங்கள் அருகில் இல்லாததால் மாயவரத்தையே மைய இடமாகக் கொள்வத நல்லது. மாயவரத்திலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கினால் பஸ் நிலையத்திற்கு எதிர்த்தெருவிலேயே சுமார் 1 பர்லாங்கு தூரத்தில் நன்கு நிர்வஹிக்கப்படும். அழகிய, பெரிய கோவில் (நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 1 மைல் தூரத்தில்) உள்ளது.
மூலவர் - நீலமேகப் பெருமாள் - கதையுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - ஸெனந்தர்யராஜன்.
தாயார் - ஸெனந்தர்யவல்லி. உத்ஸவத்தாயார் - கஜலஷ்மியாகக் காட்சியளிக்கிறார்.
தீர்த்தம் - ஸாரபுஷக்ரிணி.
விமானம் - ஸெனந்தர்ய விமானம்.
ப்ரத்யக்ஷம் - நாகராஜன், திருமங்கையாழ்வார், கலியன், ப்ரஹ்மாதிகள்.
விசேஷங்கள் - வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. பக்கத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1758 - 67 ----- 10 பாசுரங்கள்.