ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவெள்ளியங்குடி
கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் பஸ்ஸில் சேங்கானூரில் இறங்கி முக்கால் மைல் நடந்து திருவெள்ளியங்குடி செல்ல வேண்டும். சோழ வரத்திலேயே இறங்கினால் 4 மைல் வண்டியில் வரலாம். அல்லது கும்பகோணம் - ஆடுதுறை பஸ்ஸில் முட்டக்குடியில் இறங்கி ஒரு மைல் வண்டியில் வரலாம். கும்பகோணத்திலிருந்து டவுன் பஸ்ஸில் சென்றால், நேரோக திருவெள்ளியங்குடிக்கே சென்று வரலாம்.
மூலவர் - கோலவல்வில்லி ராமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - ச்ருங்கார ஸுந்தரன்.
தாயார் - மரகதவல்லி.
தீர்த்தம் - சுக்ர தீர்த்தம், ப்ரஹ்ம தீர்த்தம், இந்த்ர தீர்த்தம், பராசுர தீர்த்தம்.
ஸ்தல வ்ருக்ஷம் - கதலீ (வாழை) வ்ருக்ஷம்
விமானம் - புஷ்கலாவர்த்தக விமானம்.
ப்ரத்யக்ஷம் - சுக்ரன், ப்ரஹ்மா, இந்த்ரன், பராசுரர், மயன், மார்க்கண்டேயர், பூமிதேவி.
விசேஷங்கள் - பஸ் வசதிக் குறைவால் அதிக கவனிப்பின்றி இருக்கும் இந்த
கோவிலை ஸேவிப்பது 108 திவ்ய தேசங்களையும் ஸேவித்த பலனைத்தரும் என்று நம்பப்படுகின்றது. இங்குள்ள கருடாழ்வார் சிலையின் கைகளில் சங்குசக்ரங்கள் உண்டு. சமீபத்தில் இந்தக்கோவில் ஸம்ப்ரோஷணம் ஸ்ரீரங்கம் பெரியாச்ரமம் ஆண்டவனால் நடைபெற்றது. வழியில் உள்ள சேங்கானூர்தான் பெரியவாச்சான் பிள்ளையினடைய அவதாரஸ்தலமாகும். வெள்ளியார் வணங்க அருள் செய்தவர் இப்பெருமாள்.
மங்களா சாஸனம்.
திருமங்கையாழ்வார் - 1338 -47 -10 பாசுரங்கள்.