ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் போகலாம். அஹோபில மடம் உண்டு. கும்பகோணத்திலிருந்து மாயவரம் போகும் பஸ்ஸிலும் போகலாம்.
மூலவர் - தேவாதிராஜன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம், இடதுபுறம் கருடாழ்வாரும் வலதுபுறம் பிரஹ்லாதாழ்வானும் இருக்கிறார்கள். இடது கையில் ஊன்றிய கதை. இடதுபுறம் காவேரித்தாய் மண்டியிட்டு ஸேவிக்கிறார்.
உத்ஸவர் - உபய நாச்சியாருடன் ஆமருவியப்பன், அருகில் பசுங்கன்று எல்லையற்ற அழகு.
தாயார் - செங்கமலவல்லி.
தீர்த்தம் - தர்சனபுஷ்கரிணி, காவேரி.
விமானம் - கருட விமானம்.
ப்ரத்யக்ஷம் - தர்மதேவதை, உபரிசரவஸு, காவேரி, கருடன், அகஸ்தியர்.
விசேஷங்கள் - கோபுரத்தின் உட்புறம் கம்பனம் அவர் மனைவியும் சிலை வடிவில் நிற்கின்றனர். எதிரில் தெளிந்த நீருடன் பெரிய புஷ்கரிணி. இது கம்பன் அவதாரஸ்தலம். கோவிலுக்கு 1/2 மைல் தென்மேற்கே 'கம்பன் மேடு' என்ற இடத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்ப் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. வருடம் தோறும் கம்பன் விழாநடை பெறுகிறது. மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் செய்த பெருமாள் இவர். இதற்கு அருகிலுள்ள வேறொரு கோவிலை பாடல் பெற்ற ஸ்தலம் என்றும் கூறுகின்றனர்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1588-1627, 1854, 2066, 2077, 2673 (72) , 2674 (123) .
மொத்தம் 45 பாசுரங்கள்.