திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)

சென்னை மாயூரம் ரயில் பாதையில் வைதீசுவரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் இருக்கிறது. சீர்காழி ஸ்டேஷனிலிருந்து கிழக்கே 7 மைல். சீர்காழியிலிருந்தும், திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். திருநகரியிலிருந்து வண்டிப்பாதை உள்ளது. இங்கு வசதிகள் எதுவுமே இல்லை.

மூலவர் - கோபாலக்ருஷ்ணன் (ராஜகோபாலன்) ருக்மணீ ஸத்யபாமாவுடன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார். நாச்சியார் ஸந்நிதி இல்லை.

தீர்த்தம் - தடமலர்ப்பொய்கை.

விமானம் - ஸ்வயம்பு விமானம்.

ப்ரத்யக்ஷம் - சேனைத் தலைவர், ருத்ரன்,

குறிப்பு - அர்ச்சகர் கீழச் சாலையிலிருந்து வருகிறார். அவருடன்தான் ஸேவைக்குச் செல்ல வேண்டும்.

விசேஷங்கள் - திருமங்கையாழ்வார் அவதாரஸ்தலமான திருக்குறையலூர், மங்கை மடம், இரண்டும் இத்தலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. தை அமாவாசைக்கு மறு நாள் திருநாங்கூரில் நடக்கும் கருடஸேவை வைபவத்தில் இந்த ஊர் பெருமாளும் கருடவாஹனத்தில் எழுந்தருளுவார்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1298-1307 - 10 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருச்சிறுபுலியூர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி)
Next