ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி)
சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி வாசலிலேயே இறங்கலாம். பெரிய டவுன். ஸகல வசதிகளும் உண்டு.
மூலவர் - த்ருவிக்ரமன், தாடாளன், உலகளந்த திருவுருவம், நின்ற திருக்கோலம், கிழக்கே ஸகல வசதிகளும் உண்டு.
உத்ஸவர் - த்ரிவிக்ரம நாராயணன்.
தாயார் - மூலவர் - லோகநாயகி. உத்ஸவர் - மட்டவிழ்குழலி.
தீர்த்தம் - சங்கபுஷ்கரிணி, சக்ரதீர்த்தம்.
விமானம் - புஷ்கலாவர்த்த விமானம்.
ப்ரதயக்ஷம் - அஷ்டகோண மஹர்ஷி.
விசேஷங்கள் - பெருமாள் இடதுகாலைத் தூக்கி விண்ணை அளக்கிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் "கடியுண்டநெடுவாளை" என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார்.
செல்வ தெய்வநாயகன் ஸந்நிதியும் இங்கே உள்ளது.
ப்ருஹ்மாவுக்கு தன் ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்ட பொழுது, ரோமசமுனிவர் "உன் ஆயுசும் என் ஒரு ரோமமும்" ஸமம் என்று சொல்லி அவர் கர்வத்தை அடக்கின ஸ்தலம்.
மணவாள மாமுனிகளின் மங்களா சாஸம் பெற்றவர் தாளாளன்.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1178-1187 - 10 பாசுரங்கள்.