ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருத்தண்கா (தூப்பல், காஞ்சிபுரம்)
காஞ்சியிலேயே அஷ்டபுயகரத்திலிருந்து 3 ஃபர்லாங் மேற்கே உள்ளது. (மார்க்கம் 43 காண்க) .
மூலவர் - தீபப்ரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - மரகதவல்லி.
தீர்த்தம் - ஸரஸ்வதி தீர்த்தம்.
விமானம் - ஸ்ரீகர விமானம்.
ப்ரத்யக்ஷம் - ஸரஸ்வதி.
விசேஷங்கள் - ஸ்ரீபாஷ்யகார ஸித்தாந்த ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தரான ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் திரு அவதாரஸ்தலம். இங்கு அருவடைய ஸந்நிதியும் இருக்கிறது. பகவான் ப்ருஹ்மாதிதேவர்களை காப்பாற்ற தீபப்பரகாசனாக ஆவிர்பவித்த ஸ்தலம். தெற்கு நோக்கி வேதாந்த தேசிகன் ஸந்நிதியும், பிரதக்ஷிணத்தில் வேதாந்த தேசிகன் வைபவம் முழுவதும் சித்திர ரூபமாக வரையப்பட்டு உள்ளது. ஸந்நிதியிலுள்ள தேசிகன், ஞான முத்திரையுடன் எழுந்தருளி இருக்கிறார். தேசிகனுடைய குமாரரான நயின வரதாசார்யார் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவர் எழுந்தருளி இருக்கிறார். மற்றொரு ஸந்நிதியில் தீபப்ரகாசர் எழுந்தருளியுள்ளார். ப்ருஹ்மா செய்யும் யாகத்தைக் கெடுக்க வந்த அசுரர்கள் உலகம் முழுவதையும் இருட்டாக்கிவிட, எம்பெருமான் ஒரு பேரொளியாய்த் தோன்றி இருட்டைப் போக்கினதால். 'தீபப்பரகாசர்' என்றும் 'விளக்கொளி' என்றும் திருநாமம் ஏற்பட்டதாக ஸ்தல புராணம்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1849, 2065 - 2 பாசுரங்கள்