ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவேளுக்கை (காஞ்சிபுரம்)
காஞ்சிபுரத்திலேயே, அஷ்டபுயகரத்திலிருந்து முக்கால் மைல் தென்மேற்கே உள்ளது. (மார்க்கம் 43 காண்க) .
மூலவர் - அழகியசிங்கர், ந்ருஸிம்ஹர், முகுந்த நாயகன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி.
தீர்த்தம் - கனக ஸரஸ், ஹேமஸரஸ்.
விமானம் - கனக விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ருகுமுனி.
விசேஷங்கள் - ந்ருஸிம்ஹன் ஹஸ்திசைல குகையில் இருந்துபடியே வேறொரு ந்ருஸிம்ஹ வடிவம் கொண்டு மேற்கு திக்கில் அசுரர்களைத் துரத்திக்கொண்டுபோய் அசுரர்கள் மறுபடி வராதபடி செய்ய அங்கேயே யோகநரஸிம்மராக இருக்கிறார். இது காமாஸிகா ந்ருஸிம்ஹன் ஸந்நிதி. பெருமாள், தாயார், கருடன் ஸந்நிதிகள் உள்ளன. 'வேள்' என்ற சொல்லுக்கு 'ஆசை' என்பது பொருள். நரஸிம்ஹன் ஆசையுடன் வசிக்கும் இடமாதலால் வேளிருக்கை (வேளுக்கை) எனப் பெயர் பெற்றதாக ஐதிஹம். இரண்டொரு ஆண்டுக்கு முன்பு இந்த ஸந்நிதி ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இவரைப்பற்றி "காமாஸிகாஷ்டகம்" அருளியுள்ளார்.
மங்களாசாஸனம் -
பேயாழ்வார் - 2307, 2315, 2343
திருமங்கையாழ்வார் - 2674 (127)
மொத்தம் 4 பாசுரங்கள்