ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருப்பாடகம் (காஞ்சீபுரம்)
இதிலிருந்து ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. (மார்க்கம் 43 காண்க) . கங்கை கொண்டான் மண்டபத்தின் அருகில் இந்த ஸந்நிதி இருக்கிறது.
மூலவர் - பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ருக்மிணி, ஸத்யபாமா
தீர்த்தம் - மத்ஸ்ய தீர்த்தம்.
விமானம் - பத்ர விமானம், வேத கோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் - ஜனமேஜயன், ஹாரீத முனி.
விசேஷங்கள் - ஜனமேஜயஹாராஜன் வைசம்பாயனரிடம் பாரத கதையைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவர்களுக்காக ஹஸ்தினாபுரம் தூது சென்று விச்வரூபம் எடுத்ததை கேள்விப்பட்டு, அதை நேரில் ஸேவிக்க விரும்பி காஞ்சி வந்து, அச்வமேதயாகம் செய்து, பூர்ணாஹ§தி ஆனதும் பகவான் பாண்டவதூத
வேஷத்துடன் ஆவிர்பவித்ததாக புராண வரலாறு.
இங்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம்.
மங்களாசாஸனம் -
திருமழிசையாழ்வார் - 814, 815
திருமங்கையாழ்வார் - 1541, 2674 (127)
பூதத்தாழ்வார் - 2275
பேயாழ்வார் - 2311
மொத்தம் 6 பாசுரங்கள்.