ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திரு நீரகம் (காஞ்சீபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில் திரு ஊரகம், (உலகளந்தப் பெருமாள்) கோவிலிலேயே உள்ளது. (மார்க்கம் 43 காண்க) .
மூலவர் - இல்லை
உத்ஸவர் - ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - நிலமங்கைவல்லி.
தீர்த்தம் - அக்ரூர தீர்த்தம்.
விமானம் - ஜகதீச்வர விமானம்.
ப்ரத்யக்ஷம் - அக்ரூரர்.
குறிப்பு - மூலவர் எங்கிருக்கிறார்? பழைய கோவில் எங்கிருக்கிறது? தீர்த்தம் எங்குள்ளது? என்றெல்லாம் தெரியவில்லை. உலகளந்தப் பெருமாள் கோவிலின் வடபுறத்துப் ப்ராகாரத்தில் மிகச்சிறிய ஸந்நிதியில் உத்ஸவர் மட்டுமே எழுந்தருளியிருக்கிறார்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 2059 - 1 பாசுரம்.