ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருப்பவளவண்ணம் (காஞ்சிபுரம்)
பெரிய காஞ்சீபுரத்தில், "காஞ்சீபுரம் ரயில்வேஸ்டேஷனின் அருகிலுள்ளது. இதற்கு 2 பர்லாங் மேற்கே உள்ள பச்சை வண்ணரின் ஸந்நிதி மங்களாசாஸனம் செய்யப்படவில்லை ஆனாலும், பவளவண்ன் பச்சைவண்ணன் ஸந்நிதிகள் இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாக சேர்ந்தே ஸேவிப்பது வழக்கமாகவிருக்கிறது. இரண்டு ஸந்நிதிகளும்எதிரெதிராக அமைந்துள்ளன.
மூலவர் - பவளவண்ணன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - பவளவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .
தீர்த்தம் - சக்ர திர்த்தம்.
விமானம் - ப்ரவாள விமானம்.
ப்ரத்யக்ஷம் - அச்விநி தேவதை, பார்வதி.
விசேஷங்கள் - இந்த ஸந்நிதிகள் கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து கிழக்காகச் செல்லும் செங்கழுநீரோடைத் தெருவின் இடையில் வலது புறம் செல்லும் சாலையில் எதிரெதிராக உள்ளன. பச்சைவண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாக எழுந்தருளி உள்ளார். ப்ருகுமஹரிஷிக்கு பிரத்யக்ஷம்.
குறிப்பு - "பனிவரையின் உச்சியார், பவளவண்ணா" என்ற திருநெடுந்தாண்டகத்துப் பாசுரம் பெருமாள் திருமேனியின் நிறத்தைக் குறிப்பிடுகின்றதே தவிர, இந்த ஸ்தலத்தின் அடையாளம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, இதுதான் பழைய திவ்ய தேசமா அல்லது அது வேறெங்காவது இருக்கிறதா என்று அபிப்ராய பேதங்கள் உள்ளன. ஆயினும், பெரியவர்கள் வெகு காலமாக இதைத்தான் திவ்யதேசமாகக் கருதி ஸேவித்து வருகிறார்கள்.
மங்களாசாஸனம்.
திருமங்கையாழ்வார் - 2060 - 1 பாசுரம்.