ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருப்பரமேச்சுர விண்ணகரம் (காஞ்சீபுரம் - வைகுண்ட பெருமாள் கோவில்)
பெரிய காஞ்சீபுரத்தில், காஞ்சீபுரம் ரயிலடியிலிருந்து 1/4 மைல் தூரத்தில் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு பின்புறமுள்ள கிழக்கு ராஜவீதியில் வலது புறம் செல்லும் சாலையில் உள்ளது.
மூலவர் - பரமபத நாதன், வைகுந்தநாதன், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - வைகுந்தவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .
தீர்த்தம் - ஐரம்மத தீர்த்தம்.
விமானம் - முகுந்த விமானம்.
ப்ரத்யக்ஷம் - பல்லவராஜன்.
விசேஷங்கள் - விமானம் மூன்று அடுக்காக அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில் (அடியில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், மத்தியில் (இரண்டாவது அடுக்கில்) ஸ்ரீ தேவி பூதேவியுடன் ரங்கநாதன் சயனத்திருக்கோலத்திலும், மேல் அடுக்கில் நின்ற திருக்கோலத்திலும் உள்ளனர். ஆனால், இவர்களுக்குப் பூஜை இல்லை. விதர்ப்ப தேசத்தை அரசாண்ட விரோசனனுக்கு புத்திர ஸந்ததி இல்லாமல் காஞ்சீபுரத்திலுள்ள கைலாஸ நாதரை பூஜை செய்ய, அவருடைய அருளால், விஷ்ணுவின் த்வாரபாலகர்கள் இரண்டு
புத்திரர்களாக பல்லவன், வில்லவன் என்பவர்கள் விஷ்ணு பக்தர்களாகப்பிறக்க, புத்திரர்கள் புண்யகோடி விமானத்துக்கு வாயு மூலையில் அச்வமேத யாகம் செய்ய, ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீ வைகுண்ட நாதனாக ஸேவை ஸாதித்தபடி வீற்றிருந்த திருக்கோலத்துடன் இன்றும் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிப்பதாக ஐதீஹம். விரஜையும் அங்கே புஷ்கரிணியாக அமைந்திருக்கிறது.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1128 -1137
மொத்தம் - 10 பாசுரங்கள்.