ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருஎவ்வுள் (திருவள்ளூர் - புண்யாவர்த்த, வீக்ஷ£ரண்ய க்ஷேத்ரம்)
சென்னை - அரக்கோணம் ரயில்வேபாதையில் திருவள்ளூர் ஸ்டேஷனிலிருந்து 3 மைல் வண்டியில் அல்லது டவுன் பஸ்ஸில் போகவேண்டும். சென்னையிலிருந்து பல வெளியூர் பஸ்களில் நேராகக் கோவில் வாசலுக்கே செல்ல முடியும். வசதிகளும் உண்டு.
மூலவர் - வீரராகவப்பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - கனகவல்லி (வஸுமதி) . (தனிக்கோயில் நாச்சியார்) .
தீர்த்தம் - ஹ்ருத்தாபநாசினி புஷ்கரிணி.
விமானம் - விஜயகோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் - சாலிஹோத்ரமுனி.
விசேஷங்கள் - மூலவர் (வீரராகவன்) வலது திருக்கையை சாலிஹோத்ர முனிவரின் தலைமீது வைத்தபடியும் நான்முகனுக்கு வேதங்களை உபதேசிக்கும் வண்ணமாக இடது திருக்கரத்தில் ஜ்ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார்.
அமாவாசையன்று இந்தப்புஷ்கரிணியில் ஸ்நாநம் செய்வது மிகவும் புண்யகரமானது. இது அஹோபிலமடம் ஜீயரின் மேற்பார்வையில் உள்ளது. திருமால் சாலிஹோத்ர மஹரிஷிக்கு ப்ரத்யக்ஷமாகி "உறைதற்குரிய உள் எவ்வுள்" என்று திருநாமமாயிற்று. மதுகைடபர்களைக் கொன்று வேதியர்களையும் தாபஸர்களையும் ரக்ஷித்த ஸ்தலம். ஹ்ருத்தாபநாச புஷ்கரிணியில் தீர்த்தமாடி, வீரராகவனையும், விஜயகோடி விமானத்தையும் ஸேவிப்பதனால் எல்லா நோய்களும் பூண்டோடு அழியுமாதலால் பகவானுக்கு 'வைத்ய வீரராகவன்' என்ற திருநாமமும் உண்டு.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1058-1067, 2674 (116)
திருமழிசையாழ்வார் - 2417
மொத்தம் 12 பாசுரங்கள்.