ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருஇடவெந்தை (திருவடந்தை)
சென்னை - கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் சாலையில் 27 மைல் தூரத்திலுள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கலாம். பஸ் வசதி உண்டு. வேறு வசதிகள் இல்லை.
மூலவர் - லக்ஷ்மீ வராஹப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - நித்யகல்யாணப் பெருமாள். (தாடையில் பொட்டுடன் எழுந்தருளி இருக்கிறார்.
தாயார் - கோமளவல்லி நாச்சியார்.
ஆண்டாள், ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ ரங்கநாயகி, ஸன்னதிகளும் உண்டு.
தீர்த்தம் - கல்யாண தீர்த்தம், வராஹ தீர்த்தம்.
விமானம் - கல்யாண விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர்.
விசேஷங்கள் - காலவ மஹரிஷியின் 360 பெண்களையும் பகவான் ஒரே கன்னிகையாக்கி மடியில் வைத்துக் கொண்டு 360 கன்னிகைகளை 360 நாள் கல்யாணம் செய்து கொண்டதாக பாவிப்பதால் நித்ய கல்யாணன் என்றழைக்கப்படுகிறார். இடப் புறத்தில் பிராட்டியை ஏந்தியுள்ளபடியால் திருஇடஎந்தை எனப் பெயர் பெற்றது. மணவாள மாமுனிகளிடம் மங்களாசாஸனம் பெற்ற பெருமாள்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1021, 1108-1117, 2673 (73) , 2674 (119) - 13 பாசுரங்கள்.