திருக்கடிகை (சோளசிங்கபுரம் - சோளிங்கபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கடிகை (சோளசிங்கபுரம் - சோளிங்கபுரம்)

சென்னை - பங்களூர் ரயில் மார்க்கம், அரக்கோணம் ஜங்ஷனிலிருந்து நேராக பஸ்ஸில் போகலாம். சோளிங்கர் ரயில்வேஸ்டேஷனிலிருந்து 9 மைல் வருவது ஸெனகர்யமாக இராது. சென்னையிலிருந்து நேராக பஸ்ஸிலும் போகலாம். சுமாரான வசதிகள் உண்டு. இங்கு, கீழே உத்ஸவருக்கு ஒரு கோவிலும், மலைமேல் மூலவருக்கு ஒரு கோவிலும், ஒரு சிறிய மலைமேல் ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளன.

1. கீழேயுள்ள கோவில்

மூலவர் - இல்லை.

உத்ஸவர் - பக்தவத்ஸலப் பெருமாள். (தக்கான்) . இந்த ஸந்நிதியின் பின்புறமுள்ள ஆதிகேசவப் பெருமாளை சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஸேவிக்க முடியும். ஆண்டாள், ஆழ்வார் ஆசாரியர்கள், எறும்பியப்பார், தொட்டாசாரியார், ஸந்நிதிகள் உள்ளன.

2. பெரிய மலை - (கடிகாசலம்) சுமார் 500 அடி உயரமுள்ளது.

மூலவர் - யோக நரஸிம்ஹர் (அக்காரக்கனி) , வீற்றிருந்த திருக்கோலம்,

கிழக்கே திருமுக மண்டலம்

தாயார் - அம்ருதவல்லி. (தனிக் கோயில் நாச்சியார்) .

தீர்த்தம் - அம்ருத தீர்த்தம், தக்கான் குளம்.

விமானம் - ஸிம்ஹகஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்)

ப்ரத்யக்ஷம் - சிறிய திருவடி.

3. சிறிய மலை

யோக ஆஞ்சனேயர், கையில் சங்கு சக்கரங்கள் (நான்கு திருக்கரங்கள்) .

விசேஷங்கள் - இவ்வூரில் ஒரு கடிகை (சுமார் 1/2 மணி நேரம்) தங்கி இருந்தாலே மோக்ஷம் கிடைக்குமாதலால் கடிகாசலம், திருக்கடிகை என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம். விசுவாமித்திரர் இங்கே கடிகையில் ந்ருஸிம்ஹனை ஒரு கடிகை (நாழிகை) துதி செய்து ப்ருஹ்மரிஷி பட்டத்தை பெற்றதாக ஐதீஹம்.

மலைக்குப் போகும் வழியில் குளக்கரையில் கருடாரூடரான வரதராஜப் பெருமாள் ஸந்நிதி உள்ளது. இக்கோவிலில் உச்சிக்கால வேளையில்தான் ஸேவை கிடைப்பது நிச்சயம். தொட்டாசாரியார் என்ற மஹாசாரரியாருக்கு காஞ்சி வரதராஜன் தனது கருட ஸேவையை தந்தருளியதாக புராண வரலாறு. நரஸிம்ஹாவதாரத்தை தரிசிக்க விரும்பிய ஸப்த ரிஷிகள் இவ்விடத்தில் தவம் செய்ய ஆரம்பிக்க, ஒரு நாழிகைக்குள் அவர்கள் பயன் பெற்றமையால் கடிகாசலம் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கினாலும் பீடைகள் தொலைந்து மோª ம் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனை ஸ்தலம். பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அனேக வியாதிகள் தீர இங்கே வந்து விரதம் கடைப்பிடித்து, பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீது ஏறி எம்பெருமானை வலம் வந்து தங்கள் நோய்கள் தீர்ந்து மகிழ்ச்சியுடன் செல்லுகிறார்கள்.

ஸ்தலாசார்ய புருஷர்களான தொட்டாசாரியார் ஸ்வாமி திருவம்சத்தவர்களின் ஆதீனத்தில் இந்த கோவில் உள்ளது. மணவாள மாமுனிகள், எறும்பியப்பா மங்களாசாஸனம் செய்த ஸ்தலம்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1731, 1736, 2673 (73)

பேயாழ்வார் - 2342

மொத்தம் 4 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவயோத்தி (அயோத்யா)
Next