திருவயோத்தி (அயோத்யா)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

வடநாட்டுத் திருப்பதிகள்

திருவயோத்தி (அயோத்யா)

மொகல்சராஸ் (காசி - வாரணாசி) லக்னென ரயில் மார்க்கத்தில் பைசாபாத்

ஸ்டேஷனிலிருந்து வண்டியில் போகவேண்டும். அங்கிருந்து அயோத்தி சுமார் 3

மைல் உள்ளது. இவ்வூரில் தங்குவதற்கு பிர்லாமந்திரும் மற்றும் பல சத்திரங்கள் உள்ளன. சாப்பாட்டுக் கடைகளும் உள்ளன.

மூலவர் - ஸ்ரீ ராமன், சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன், வீற்றிருந்த திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலம்.

தாயார் - ஸீதாபிராட்டி.

தீர்த்தம் - பரமபதஸத்ய புஷ்கரிணி, ஸரயூ நதி.

விமானம் - புஷ்கல விமானம்.

ப்ரத்யக்ஷம் - பரதாழ்வான், தேவர்கள், முனிவர்கள்.

விசேஷங்கள் - ஸரயூ நதிக்கருகில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள அம்மாஜி மந்திர் என்ற கோவில் அதே பழைய இடத்தில் இருக்கிறது. ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியுடன் கூடிய ராமர் ஸந்நிதி அதே பாணியில் உள்ளது. இங்கேயும் அர்ச்சகரிடம் சொல்லிவிட்டுத் தங்கலாம். ப்ருஹ்மாவின் முதல் பிள்ளையாகிய ஸ்வாயம்புவமனுக்கு ஸ்ரீமந்நாராயணன் வைகுண்ட மத்தியிலிருந்து

அயோத்தி என்னும் பாகத்தை ப்ருஹ்மா மூலமாக மனு சக்கரவர்த்தி கையில் கொடுக்க அவர் அதை பூலோகத்துக்குக் கொண்டு வந்து ஸரயூ நதியின் தென் கரையில் ஸ்தாபித்ததால் 'அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்' என்னும்படி ஆயிற்று. ஏழுமுக்தி தரும நகரங்களில் இதுவும் ஒன்று.

குறிப்பு - ஆழ்வார் பாடிய கோவிலும் மூர்த்திகளும் இல்லை.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 312, 314, 316, 321, 325, 399

குலசேகராழ்வார் - 724, 725, 741, 748

தொண்டரடிப்பொடியாழ்வார் - 920

திருமங்கையாழ்வார் - 1875

நம்மாழ்வார் - 3381

மொத்தம் 13 பாசுரங்கள்.


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கடிகை (சோளசிங்கபுரம் - சோளிங்கபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருநைமிசாரண்யம்
Next