ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருச்சாளக்ராமம் (ஸாளக்ராமம்)
இந்தத் திவ்ய தேசம் நேபாள நாட்டில் உள்ளது. போகும் வழியில் எங்கும் தங்குமிடமோ, உணவு வசதிகளோ கிடையாது. மலையேறுபவர்கள் சொந்த வசதிகளுடனே கூட்டமாகச் செல்ல வேண்டும்.
மூலவர் - ஸ்ரீ மூர்த்தி, நின்ற திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார்.
தீர்த்தம் - சக்ர தீர்த்தம், கண்டகி நதி.
விமானம் - கனக விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, ருத்ரர், கண்டகி.
விசேஷங்கள் - இந்த ஸ்தலம் இருக்குமிடத்தைப் பற்றி மாறுபாடான கருத்துக்கள் உள்ளன. எனினும், நேபாள தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து 170 மைல் தூரத்திலுள்ள முக்தீநாராயண க்ஷேத்ரம் (முக்திநாத்) போகும் வழியில் கண்டகீ நதிக்கரையில் உள்ளது என்று சொல்லப்படுகிது. ஸாளக்ராமம் என்பது வேற இல்லை, மூக்தீ நாராயண க்ஷேத்ரம் (முக்திநாத்) போகும் வழியில் கண்டகீ நதிக்கரையில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஸாளக்ராமம் என்பது வேறு இல்லை, மூக்தீ நாராயண க்ஷேத்ரமேதான் - சாளக்ராமம் என்று கூறுவோரும் உண்டு. இங்குதான் கண்டகீ நதியின் ஆரம்பப் பகுதி. கண்டகீ நதிக்கரையில் காட்மண்டுவிலிருந்து சுமார் 65 மைல் தூரத்தில் உள்ள "தாமோதரகுண்ட்" என்னும் இடம்தான் ஸாளக்ராமம் என்றும் கூறுகிறார்கள்.
ஸாளக்ராம க்ஷேத்ரத்தில் கண்டகீ நதியில்தான் நாம் பூஜை செய்யும் ஸாளக்ராமங்கள் (ஸாளக்ராவா) கிடைக்கின்றன என்பது பற்றி கருத்துவேற்றுமையில்லை. இவ்விடத்திற்குச் செல்வதற்கு நேபாள அரசாங்கம், யாத்ரிகர்களின் பாதுகாப்பைக் கருதி, 50 பேருக்குக் குறைவான கோஷ்டிகளுக்க அனுமதி வழங்குவதில்லை. ஸ்ரீ ராமாநுஜர் மங்களாசாஸனம் செய்த இடம்.
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 206, 399
திருமங்கையாழ்வார் - 988-997
மொத்தம் 12 பாசுரங்கள்.