ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து வண்டி பிடித்துக்கொண்டு 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம். வசதிகள் ஒன்றுமில்லை.
மூலவர் - நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.
தீர்த்தம் - யமுனா நதி.
விமானம் - ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் - நந்தகோபர்.
குறிப்பு - ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் "புராணா கோகுல்" (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாததால் இரண்டையும் ஸேவித்துவிடுவது நல்லது.
மங்களா சாஸனம் -
பெரியாழ்வார் - 14, 16, 132, 145, 231, 235, 237, 239, 263, 281
ஆண்டாள் - 474, 618, 630, 636, 638.
திருமங்கையாழ்வார் - 1021, 1392, 1435, 1993, 1994, 1995, 2673 (28)
மொத்தம் 22 பாசுரங்கள்.