திருத்வாரகை (துவரை, துவாராபதி)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

வடநாட்டுத் திருப்பதிகள்

திருத்வாரகை (துவரை, துவாராபதி)

பம்பாய், ஆமதாபாத், வீராம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில்பாதையில் துறைமுகத்துக்கு சுமார் 20 மைலில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து 1 1/2 மைல் வண்டியில் போய், கோவிலை அடையலாம். வசதிகள் எல்லாம் உண்டு. ஆமதாபாத்திலிருந்தும் நேராகத் துவாரகைக்கு பஸ்கள் செல்கின்றன. பேட்துவாரகை (ஓகா துறைமுகம்) ப்ரபாஸ தீர்த்தம் (வராவல் ஸ்டேஷன்) ரைவத மலை (கிரினா, ஜுனாகட்ஸ்டேஷன்) க்ருஷ்ணன் ஆலயம் (பாலகா ஸ்டேஷன்) .

மூலவர் - கல்யாண நாராயணன், த்வாரகாதீசன் (த்வாரகா நாத்ஜீ) , நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - கல்யாண நாச்சியார் (லக்ஷ்மீஸ்ரீ) , ருக்மணி, அஷ்டமஹரிஷிகள்.

தீர்த்தம் - கோமதீ நதி, ஸமுத்திர ஸங்கமம்.

விமானம் - ஹேமகூட விமானம்.

ப்ரத்யக்ஷம் - த்ரெனபதி.

விசேஷங்கள் - இது முக்தி தரும் ஏழு ஸ்தலங்களுள் ஒன்றாகும். ஜராஸந்தன், ஜனங்களுக்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்க, ஸ்ரீ க்ருஷ்ணன் சமுத்திர ராஜனிடம் இடம் கேட்டு, வாங்கி, விச்வகர்மாவைக் கொண்டு துவாரகையை ச்ருஷ்டித்ததாக ஐதீஹம். மோக்ஷத்துக்கு த்வாரமாக இருப்பதால் த்வாரகை என்ற பெயர் உண்டாயிற்று. கோவிலிலிருந்து பலபடிகள் இறங்கிச் சென்றால் எதிரே கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்திலிருந்து பஸ்ஸில் ஓகா துறைமுகம் சென்று, அங்கிருந்து விசைப்படகில் பேட் த்வாரகா (தீவு துவாரகை) என்ற தீவுக்குப் போகலாம். இதுதான் க்ருஷ்ணன் திருமாளிகை. சுமார் 1.500 க்ருஹங்கள் இங்கே இருக்கின்றன. காலை 5 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸேவையாகும். இங்குள்ள மூலவர் (த்வாரக் நாத்ஜீ) சங்குசக்ர கதாதாரியாக ஸேவை ஸாதிக்கிறார். மூன்று மைல் தூரத்தில் சங்க தீர்த்தம் அற்புதமாயிருக்கிறது. அலங்காரம் நம் எதிரிலேயே நடக்கிறது. திருமார்பில் லக்ஷ்மீ ஸேவை ஸாதிக்கிறாள். ருக்மிணீ உத்ஸவத்தாயார். இன்றும் கல்யாணராயர் (க்ருஷ்ணன்) த்ரிவிக்ரமூர்த்தி, தேவகீ, ஜாம்பவதி, லக்ஷ்மீ நாராயணன் போன்ற பலருடைய ஸந்நிதிகள் உள்ளன. காலை 5 மணி முதல் ஸேவை ஆகும். பிரதி தினமும் பகவானுக்கு குழந்தை போலவும், ராஜாவைப் போலவும் வைதிகோத்தமன் போலவும் அலங்காரம் செய்கிறார்கள். திருமஞ்சனமம் தினமும் நடக்கிறது. ஏகாந்த ஸேவையும் உண்டு. த்வாரகையிலிருந்து ஓகா போகும் வழியில் சுமார் 21/2 மைல் தூரத்தில் ருக்மணி பிராட்டியின் தனிக்கோவில் உள்ளது. இங்கேதான் க்ருஷ்ணன் ருக்மணியை விவாஹம் செய்துகொண்டதாக ஐதீஹம்.

குறிப்பு - கையில் ஆஹாரம் கொண்டு செல்வது நல்லது. த்வாரகை ஸமீபம் தோதாத்திரி மடத்தில் தங்கலாம். திரும்பும் போது விராவல் ஸ்டேஷனில் இறங்கி ப்ரபாஸ தீர்த்தம், சலவை சிற்பங்களால் அழகு பெற்ற ஸோமநாதர் கோயில் பாலகா என்ற இடத்தில் க்ருஷ்ணன் ஆலயம் பஞ்சஸ்ரோதா ஹிரண்யா, ஸமுத்திர ஸங்கம ஸ்நான கட்டம் இவைகளை காணலாம். இங்கு பிரஸித்திபெற்ற சோமநாதர் ஆலயத்தையும் காணலாம். போகும் போதோ திரும்பும்போதோ ஜுனாகாட் ஸ்டேஷனில் இறங்கி நூறு மைல் போனால், கிரிநார் என்ற ரைவத மலையையும் பல கோயில்களையும் மடங்களையும் காணலாம். இங்கு பிரஸித்திபெற்ற சோமநாதர் ஆலயத்தையும் காணலாம். போகும் போதோ திரும்பும்போதோ ஜுனகட் ஸ்டேஷனில் இறங்கி நூறு மைல் போனால், கிரிநார் என்ற ரைவத மலையையும் பல கோயில்களையும் மடங்களையும் காணலாம். க்ருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் ஸேவை ஸாதித்த அரச மரத்தடி சயனத் திருக்கோலத்தை பாலகா என்ற இடத்தில் காணலாம்.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 333, 398, 399, 415, 472

ஆண்டாள் - 507, 541, 594, 625

திருமங்கையாழ்வார் - 1504, 1524

திருமழிசையாழ்வார் - 2452

நம்மாழ்வார் - 3144

மொத்தம் 13 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
Next