ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருக்கடித்தானம்
திருவல்லாவிலிருந்து கோட்டயம் சாலையில் 5 மைல் பஸ்ஸில் சென்று, செங்கணச்சேரியில் இறங்கி, அங்கிருந்து வேறு சாலையில் கிழக்கே இரண்டு மைல் சென்று இவ்வூரை அடையலாம். இங்கு வசதி ஒன்றும் கிடையாது. தங்குவதானால் செங்கனாச்சேரியிலேயே தங்கவேண்டம். அல்லது திருவல்ல வாழில் தங்கி இங்கே பஸ்ஸில் வந்து ஸேவித்துவிட்டுத் திரும்பலாம்.
மூலவர் - அத்புத நாராயணன் (அம்ருத நாராயணன்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - கற்பகவல்லி.
தீர்த்தம் - பூமி தீர்த்தம்.
விமானம் - புண்யகோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் - ருக்மாங்கதன்.
விசேஷங்கள் - இங்கே நரஸிம்ஹன், க்ருக்ஷ்ணன் ஸந்நிதிகளும் இருக்கின்றன. ருக்மாங்கதன் என்கிற ஸ¨ர்ய வம்சத்து அரசன் ஆண்ட இடம். ஏகாதசி வ்ரதம் இருந்து அதன் பலனை தேவர்களுக்குக் கொடுத்து, அவர்களை தேவலோகம் அனுப்பித்த ஸ்துலம். இந்த ஸந்நிதியை ஸஹதேவன் ஜீர்ணோத்தாரணம் செய்ததால், ஸஹதேவ ப்ரதிஷ்டை என்பர்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3502-12 - 11 பாசுரங்கள்