ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு)
திருவணந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயில்பாதையில் செங்கண்ணூர் ஸ்டேஷன் இருக்கிறது. வெளியூர் பஸ்கள் பல வருகின்றன. ஹோட்டல்கள் சத்திரங்கள் உண்டு. தர்மர் தவம் செய்த இடம். பெரிய டவுன்
மூலவர் - இமையவரப்பன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - செங்கமலவல்லி.
தீர்த்தம் - சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு.
விமானம் - ஜகஜ்ஜோதி விமானம்.
ப்ரத்யக்ஷம் - ருத்ரன் (சிவன்)
விசேஷங்கள் - சூரன் பத்மன் என்றிருவர் சிவன் வரம்பெற்று ஓர் உடலாய் சூரபத்மன் என்ற பெயர் பூண்டு, தேவர் உள்பட எல்லாரையும் இம்சை செய்ததால், ஸ¨ப்ரஹ்மண்யன் இவர்களை ஸம்ஹாரம் செய்து, அவர்களைக் கொடியில் சேவலாகவும் மயிலாகவும் ஆக்கிக்கொண்டதாக வரலாறு. தன் குருவான துரோணரை யுத்தத்தில் கொல்வதிற்கு "அச்வத்தாமா ஹத" என்று உரக்கச் சொல்லி "குஞ்ஜர" என்று மெதுவாக சொன்னது தர்மபுத்ரரின் மனதை வருத்தியபடியால், இத்தலத்திற்கு வந்து ஆலய ஜீர்ணோத்தாரணம் செய்து, திருசிற்றாற்றில் ஸ்நானமும் பகவத் பூஜையும் செய்து, மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. தர்மபுத்ரர் ஜிர்ணோத்தாரணம் செய்ததால், தர்மபுத்ரர் ப்ரதிஷ்டை என்பர்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3480-90 - 11 பாசுரங்கள்.