ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருவனந்தபுரம்
சென்னை - திருவனந்தபுரம் ரயில் மார்க்கத்தில் திருவனந்தபுரம் ஸெண்டரல் ரயில்வேஸ்டேஷனிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் கோவில் இருக்கிறது.
எல்லா வசதிகளும் உள்ள பெரிய நகரம். பஸ் வசதிகள் உண்டு. கேரள ராஜ்யத்தின் தலைநகர்.
மூலவர் - அநந்தபத்மநாபன், புஜங்கசயனம் (அநந்த சயனம்) , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ஸ்ரீ ஹரிலக்ஷ்மி.
தீர்த்தம் - மத்ஸ் தீர்த்தம், பத்ம தீர்த்தம், வராஹ தீர்த்தம்.
விமானம் - ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் - இந்த்ரன், சந்த்ரன், ஏகாதச ருத்ரர்கள்.
விசேஷங்கள் - மிகப்பெரிய திருமேனியாதலால், சிரஸ் உடல், திருவடிகள் இவற்றை 3 வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்கவேண்டும். தென்புறம் பிராகாரத்தில் யோக நரஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானம், ஸந்நிதிக்குப் பின்னால் க்ருஷ்ணனும் காட்சியளிக்கின்றனர். ஹனுமான்மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும், எந்த வெயிற்காலத்திலும் உருகுவதுமில்லை. கெட்டுப்போவதுமில்லையாம். லக்ஷ்மீவராஹர் கோயிலும் ஸ்ரீநிவாஸர் கோவிலும் தெற்கு பக்கத்தில் உள்ளன. தேசிகன் மங்களாசாஸனம் செய்த ஸ்தலம். திவாகரயோகி என்பவர் ஆசாபாசங்களை விட்டு, க்ஷீராப்திநாதனைக் கண்டு முக்தி அடைய, ஸதாஹரி பூஜை செய்துகொண்டிருந்தார். அவரை அநுக்ரஹிக்க பகாவன் திருவுள்ளம் கொண்டு இரண்டு வயதுள்ள குழந்தையாக யோகி முன் தோன்றி யோகி பிரார்த்தித்தபடி இருக்க, ஒரு நாள் யோகி பூஜை செய்யும்போது ஒரு ஸாளக்ராமத்தை குழந்தை வாயில் போட்டுக்கொண்டதை யோகி பார்த்துக் கண்டிக்க, குழந்தை ஓட, யோகி துரத்த, குழந்தை ஒரு மரப்பொந்தில் புகுந்து மரம் விழுந்து பகவான் பெரிய உருவத்துடன் ஸேவை ஸாதித்ததாகவும், யோகி பிரார்த்தனைப்படி பகவான் த்ரிதண்டத்தளவு வடிவமெடுத்து திருமுக மண்டலம், நாபி, பாதம் இப்படி மூன்று த்வாரத்தால் ஸேவிக்கும்படி திருக்கோலம் பூண்டதாகவும் ஐதீஹம். இங்கு அனந்தசயன விரதம் இருப்பது விசேஷமாக கருதுகிறார்கள்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3678-88 - 11 பாசுரங்கள்