திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)

இது திருநெல்வேலி - திருச்செந்தூர் லைனில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இருந்து 1 1/2 மைல் தூரம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலும் வரலாம்.

இங்கு தங்குமிடங்கள் சிறப்பாக இல்லை. சாப்பாட்டு வசதி நிறைய உண்டு. இங்கு இருந்துகொண்டு ஆழ்வார் நவதிருப்பதிகளை ஸேவிக்கலாம்.

மூலவர் - ஸ்ரீ வைகுண்டநாதன், கள்ளப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - வைகுந்தவல்லி, பூதேவி (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள்)

தீர்த்தம் - ப்ருகு தீர்த்தம், தாம்பரபரணி நதி.

விமானம் - சந்த்ர விமானம்.

ப்ரத்யக்ஷம் - ப்ருகு சக்ரவர்த்தி, இந்த்ரன்.

விசேஷங்கள் - ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பு. காலதூஷகன் என்ற சோரன் (திருடன்) தான் திருடிய பொருளில் பாதி வைகுண்டநாதனுக்கு ஸமர்ப்பித்ததாகவும், ஒருசமயம் அரண்மனையில் திருடுகையில் பிடிபட்டு வைகுண்டநாதனை த்யானம் செய்ய, பகவான் திருடன் வேடம் பூண்டு அரசனுக்கு தத்வங்களை உபதேசித்து, காலதூஷகன் திருடன் அல்ல யோகி என்று அரசன் நினைக்க, பகவான் ப்ரத்யக்ஷமாகி திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாக்கி அரசன் பிரார்த்தனைப்படி பகவான் "கள்ளப்பிரான்" என்ற திருநாமம் பெற்றார். ஸோமகன் என்னும் அசுரன் சதுர்முகனடைய ஞானத்தை அபஹரித்ததாகவும், ப்ருஹ்மா இவ்விடத்தில் தவம் செய்து, பகவான் ப்ரத்யக்ஷமாகி, அசுரன் அபஹரித்த ஸ்ருஷ்டிஸாமர்த்திய ஞானத்தை கொடுத்ததாக வரலாறு. மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம் செய்த இடம்.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3571, 3575 - 2 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருச்சிரீவரமங்கை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவரகுணமங்கை
Next