ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருவரகுணமங்கை
(ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)
திருநெல்வேலி - ஸ்ரீ வைகுண்டம் ரயில் பாதையில், ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து, கிழக்கே 1 1/2மைல் தூரத்தில் உள்ளது. இங்கு வீடுகளே கிடையாது. நத்தம் என்றால் தான் பலருக்குத் தெரியும்.
மூலவர் - விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத்தாயார், உபயநாச்சிமார் (தனிக்கோவில் நாச்சியார் இல்லை)
தீர்த்தம் - அக்நி தீர்த்தம், தேவபுஷ்கரிணி.
விமானம் - விஜயகோடி விமானம்.
ப்ரத்யக்ஷம் - அக்னி, ரோமசமுனிவர், சத்தியவான்.
விசேஷங்கள் - வேதவித் என்னும் ப்ராம்ஹணன் இத்தலத்தில் விஷ்ணுவை குறித்து தவமிருந்து பகவான் ப்ரத்யக்ஷமான போது அவர் ப்ரார்த்தித்தபடி 'விஜயாஸனர்' என்ற திருநாமம் பகவானுக்கு ஏற்பட்டதாக ஐதீஹம்.
மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் பெற்ற இடம்.
குறிப்பு - ஸேவிப்பதற்கு முன் கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ள
வேண்டும்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3571 - 1 பாசுரம்.