எம்மாவீடு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

எம்மாவீடு

'பகவானே!எனக்கென்று எதுவும் வேண்டா. உள் திருவுள்ளத்திற்கு விருப்பமானதே எனக்கு வேண்டும். மோக்ஷமோ, கைவல்யமோ, ஆத்ம நாசமோ நரகமோ, c எது கொடுத்தாலும் எனக்குக் கவலை இல்லை. உன் விருப்பத்திற்கு ஏற்றதே எனக்கு வேண்டும்' என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார். தத்வ ஹித புருஷார்த்தங்களில் புருஷார்த்தத்தை இப்பதிகம் கூறுகிறது.

வேண்டிப் பெறுதல் ஈதே என்னல்

கலி விருத்தம்

ஆதிமூலமே!நின் திருவடிகளே எனக்கு வேண்டும்

2875. எம்மா வீட்டுத் திறமும் செப்பம்,நின்

செம்மா பாதபற்புத் தலைசேர்த் தொல்லை,

கைம்மா துன்பம் கடிந்த பிரானே,

அம்மா!அடியேன் வேண்டுவது ஈதே.

எந்தாய் ஞானக்கை தா

2876. இதேயா னுன்னைக் கொள்வதெஞ் ஞான்றும்,என்

மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்,

எய்தா நின்கழல் யானெய்த, ஞானக்

கைதா காலக் கழிவுசெய் யேலே.

கண்ணபிரானே!நின்கழல் ஏத்த அருள்

2877. செய்யேல் தீவினை யென்றருள் செய்யும்,என்

கையோர் சக்கரக் கண்ண பிரானே,

ஐயார் கண்டம் அடைக்கிலும், நின்கழல்

எய்யா தேத்த அருள்செய் எனக்கே.

கண்ணா!உனக்காகவே என்னை ஏற்கவேண்டும்

2878. 'எனக்கேயாட் செய்யெக் காலத்தும்' என்று,என்

மனக்கே வந்திடை வீடின்றி மன்னி,

தனக்கே யாகவெ னைக்கொள்ளு மீதே,

எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

எங்கே கதி கிடைத்தாலும் கண்ணனை மறவேன்

2879. சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்,

இறப்பில் எய்துக எய்தற்க, யானும்

பிறப்பில் பல்பிற விப்பெரு மானை,

மறப்பொன் றின்றியென் றும்மகிழ வேனே.

திருமாலே!நின்னை வணங்கவேண்டும் :வருக

2880. மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,

மகிழ்கொள் சோதி மலர்ந்தவம் மானே,

மகிழ்கொள் சிந்தைசொல் செய்கைகொண்டு, என்றும்

மகிழ்வுற் றுன்னை வணங்கவா ராயே.

கண்ணா!உன் திருவடி அடையும் அருள் தா

2881. வாராய் உன்திருப் பாத மலர்க்கீழ்,

பேரா தேயான் வந்தடை யும்படி

தாராதாய், உன்னை என்னுள் வைப்பிலென்றும்

ஆரா தாய்,எனக் கென்றுமெக் காலே.

சர்க்கரைக்கட்டியே!என் மனத்தில் தங்குக

2882. எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்,மற்

றெக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்,

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்

அக்காரக் கனியே!உன்னை யானே.

தேவதேவனே!யானே c :என் செல்வமும் c

2883. யானே என்னை அறியகி லாதே,

யானே என்றன தேயென் றிருந்தேன்,

யானே நீயென் உடைமையும் நீயே,

வானே ஏத்துமெம் வானவ ரேறே!

இராமபிரானே!என்னை நின்னடி சேர்த்துக்கொள்

2884. ஏறே லேழும்வென் றேர்கொள் இலங்கையை,

நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி,

தேறேல் என்னையுன் பொன்னடிச் சேர்த்தொல்லை,

வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.

இவற்றை பாடுக :மோட்சம் கிடைக்கும்

2885. விடலில் சக்கரத் தண்ணலை, மேவல்

விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கெடலில் ஆயிரத் துள்ளிவை பத்தும்,

கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.

நேரிசை வெண்பா

மனமே!மாறன் திருவடிகளைச் சூடு

'எம்மாவீ டும்வேண்டா என்றனக்கூன றாளிணையே,

அம்மா!அமையும்'என ஆய்ந்துரைத்த,-நம்முடைய

வாழ்முதலாம் மாறன் மலர்த்தாள் இணைசூடிக்

கீழ்மையற்று நெஞ்சே!கிளர்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அணைவது
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கிளரொளி
Next