ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு, பரம்)
இது பூலோகத்தில் இல்லை. இது வைஷ்ணவர்களின் லக்ஷ்யமான மோட்ச நிலையாகும். எம்பெருமானின் பரத்வம் விளங்குமிடம், இங்கு ஜீவாத்மாக்கள் பகவானைப் போலவே ஸ்வரூபம் பெற்று, ஆனால் அவனுடன் இரண்டறக்கலவாமல் அவனுக்குக் கைங்கர்யம் செய்வார்கள்.
பெருமாள் - பரமபத நாதன், வீற்றிருந்த திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் - பெரிய பிராட்டியார்.
தீர்த்தம் - விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.
விமானம் - அநந்தாங்க விமானம்.
ப்ரத்யக்ஷம் - அநந்த கருடவிஷ்வக்ஸேநாதி, நித்ய ஸ¨ரிகள், முக்தர்கள்.
குறிப்பு - இங்கே சென்றவர் யாரும் திரும்புவதில்லையாகையால், "தெளிவிசும்பு திருநாடு". "நலமந்தமில்லதோர் நாடு". சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதி" என்றெல்லாம் ஆழ்வார்கள் வர்ணித்திருப்பதே நமக்குச் சான்று. ஸ்ரீமத் ராமானுஜர் தமது "வேதார்த்த ஸங்க்ரஹம்" என்ற க்ரந்தத்தில் இதனை வெகு விரிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் வர்ணித்துள்ளார். 106 திவ்ய தேசங்களையும் ஸேவித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்தபின், பகவானே இந்தத் திவ்ய தேசத்தை அவர்களுடைய நிரந்தர வாஸஸ்தலமாக்கி மகிழ்விப்பான் என்பது பெரியோர் வாக்கு.
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 190, 277, 399, 472
ஆண்டாள் - 482.
திருமழிசையாழ்வார் - 796, 2476
திருப்பாணாழ்வார் - 927
திருமங்கையாழ்வார் - 2042
பொய்கையாழ்வார் - 2149, 2158
பேயாழ்வார் - 2342.
நம்மாழ்வார் - 2543, 2545, 2552, 2867, 3000, 3040, 3431, 3465, 3585, 3627, 3740, 3747, 3755-65 - மொத்தம் 36 பாசுரங்கள்.