ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருவில்லிப்புத்தூர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்)
தென்காசி - விருதுநகர் ரயில்பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனிலிருந்த இப்பெரிய ஊர் 1 1/2 மைல் தூரத்திலுள்ளது. பலவிடங்களிலிருந்தும் பஸ்களும் உண்டு. அஹோபில மடம், சத்திரங்கள், ஹோட்டல்கள் வசதிகள் உண்டு. மலைமீது ஸ்ரீநிவாஸர் கோயில்.
மூலவர் - வடபத்ரசாயீ (ரங்கமன்னார்) ,புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ஆண்டாள் (கோதா நாச்சியார்)
தீர்த்தம் - திருமுக்குளம்.
விமானம் - ஸம்சன விமானம்.
ப்ரத்யக்ஷம் - மண்டூகமணி, பெரியாழ்வார்.
விசேஷங்கள் - ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்தலம்.
ஆண்டாள் ரெங்கநாதரை மணந்த ஸ்தலம். ரங்கமன்னாருக்கு வலதுபுறம் ஆண்டாளும் இடதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். பெருமாளுடன் கருடாழ்வார் நிற்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். பெருமாள் வடபத்ரசாயீயாயிருந்தாலும் ஆதிசேஷன் உண்டு. வழக்கம்போல் பெருமாளின் நாபீகமலத்திலுருந்து ப்ரஹ்மா ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களான வில்லி, புத்தன் என்ற இரு வேடுவ அரசர்களுடனும் உள்ளனர். இவ்வேடுவர்களால் இந்நகரைக் கட்டப்பட்டபடியால் வில்லிப்புத்தூர் என்று பெயர் வந்துள்ளது. பெரியாழ்வார் ஸந்நிதி ஒன்றும், ஆண்டாள் கண்டெடக்கப்பட்ட நந்தவனத்தில் துளசிசெடி பக்கத்தில் ஆண்டாள் ஸந்நிதி ஒன்றும் உள்ளன. ஸ்ரீரங்கத்திற்போல் இங்கும் "அரையர்ஸேவை" உண்டு.
பெரியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்து கொண்டு, மாலை பெருமாளுக்கு ஸமர்ப்பித்து வருகையில், ஆண்டாள், ஆழ்வாருக்குத் தெரியாமல் பெருமாளுக்கு ஸமர்பபிக்கும் மாலையை தான் அணிந்து கொண்டு கணணாடியில் அழகு பார்க்க, இதனைக் கண்ட ஆழ்வார் ஆண்டாளை கோபிக்க, 'ஆண்டாள்' சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று பெருமாள் கனவில் சொல், அது முதல் கோதை நாச்சியாருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் உண்டாயிற்று.
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 133
ஆண்டாள் - 549
மொத்தம் 2 பாசுரங்கள்.