உண்ணிலாவிய

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

உண்ணிலாவிய

இவ்வுலகில் இருந்தால் இன்னும் என்னென்ன துன்பம் விளையுமோ என்று அஞ்சி நடுங்கி ஓலமிடுகிறார் ஆழ்வார்.

'ஐம்புலன்களால் எவ்வளவு நாட்கள் துன்புறுவேன்'

என்று வருந்துதல்

ஆசிரியத்துறை

அப்பனே!என்னை இன்னும் நலிய எண்ணுகிறாயே!

3337. உண்ணி லாவிய ஐவ ரால்குமை

தீற்றி யென்னையுன் பாத பங்கயம்,

நண்ணிலா வகையே நலிவா னின்ன மெண்ணு கின்றாய்,

எண்ணி லாப்பெரு மாயனே!இமையோர்கள்

ஏத்து முலக மூன்றுடை,

அண்ண லே!அமு தே!அப்ப னே!என்னை யாள்வானே! 1

கண்ணா!நான் உன்னை அணுகாவகை செய்கிறாயே!

3338. என்னை யாளும் வன்கோ வோரைந் திவைபெய்

திராப்பகல் மோது வித்திட்டு,

உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,

கன்ன லே!அமு தே!கார் முகில்வண்ண

னே!கடல் ஞாலம் காக்கின்ற,

மின்னு நேமிய னாய்!வினை யேனுடை வேதியனே! 2

மதுசூதனா!என்னைத் தடுப்பதால் உனக்கு என்ன பயன்?

3339. வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை

மோது வித்து,உன் திருவடிச்

சாதி யாவகை நீதடுத் தென்பெறு தியந்தோ,

ஆதி யாகி யகலி டம்படைத் துண்டு மிழ்ந்து

கடந்திடந் திட்ட,

சோதி நீண்முடி யாய்!தொண்ட னேன்மது சூதனனே! 3

வினை தீர்ப்பவனே!நீ என்னை விட்டு அகல்கிறாயா?

3340. சூது நானறி யாவகை சுழற்றியோர்

ஐவரைக் காட்டி,உன் அடிப்போது

நானணு காவகை செய்து போதி கண்டாய்,

யாதும் யாவரு மின்றிநின் னகம்பால்

ஒடுக்கியோ ராலி னீளிலை,

மீது சேர்குழவி!வினையேன் வினைதீர் மருந்தே! 4

பெருமானே!இனி எனக்கு மருந்தாவார் யார்?

3341. தீர்மருந் தின்றி யைந்து நோயடும்

செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,

நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பா னொக்கின்றாய்,

ஆர்ம ருந்தினி யாகுவார்? அடலாழி

யேந்தி யசுரர் வன்குலம்,

வேர்மருங்கறுத் தாய்!விண்ணு ளார்பெரு மானேயோ! 5

பரமனே!எனக்கு ஒரு வழி சொல்

3342. விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய்

வாரை யும்செறும் ஐம்பு லனிவை,

மண்ணு ளென்னைப் பெற்றா லென்செய் யாமற்று நீயும் விட்டால்?

பண்ணு ளாய்!கவி தன்னு ளாய்!பத்தி

யினுள் ளாய்!பர மீசனே, வந்தென்

கண்ணுளாய்!நெஞ்சுளாய்!சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே. 6

அமுதே!ஐம்புலனை நான் என்று வெல்வேன்?

3343. ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிதாத

ஒரைவர் வன்கயவரை,

என்று யான்வெல் கிற்பனுன் திருவரு ளில்லையேல்?,

அன்று தேவர் அசுரர் வாங்க

இலைகட லரவம் அளாவி,ஓர்

குன்றம் வைத்த எந்தாய்!கொடியேன் பருகின் னமுதே! 7

மூர்த்தியே!உடல் பாரத்தைத் தந்துவிட்டாயே!

3346. 'என்பரஞ் சுடரே!'என்றுன்னை அலற்றியுன்

இணைத்தா மரைகட்கு,

அன்புருகி நிற்கும் அதுநிற்கச் சுமடு தந்தாய்,

வன்பரங்க ளெடுத்துஐவர் திசைதிசை

வலித்தெற்று கின்றனர்,

முன்பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ! 10

இவற்றைப் பாடுக:வினை போகும்

3347. கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்

படைத்தளித் துக்கெடுக் கும்,அப்

புண்ட ரீகக்கொப் பூழ்ப்புனற் பள்ளி யப்பனுக்கே,

தொண்டர் தொண்டர் தொண்டர் தெண்டன் சடகோபன்

சொல்லா யிரத்து ளிப்பதும்,

கண்டு பாடவல் லார்வினை போம்கங்கு லும்பகலே. 11

நேரிசை வெண்பா

மாறனைத் துதி:பிறவித் துன்பம் நீங்கும்

'உண்ணிலா வைவ ருடனிருத்தி யிவ்வுலகில்,

எண்ணிலா மாய னெனைநலிய, - எண்ணுகின்றான்'

என்றுநினைந் தோலமிட்ட இன்புகழ்சேர் மாறனெனக்

குன்றிவிடு மேபவக்கங் குல். (61)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is உலகம் உண்ட
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கங்குலும் பகலும்
Next