என்றைக்கும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

என்றைக்கும்

ஆழ்வார் ஒன்று கேட்டால் எம்பெருமான் ஒன்று சொல்லி அவரது எண்ணத்தை மறக்கச் செய்து வந்தான். ஒரு நாள் ஆழ்வார் பகவானை வலியப் பிடித்துக்கொண்டார். 'எம்பெருமானே!என்னிடம் என்ன குறை கண்டாய் என்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறாய்!இந்தப் பூமியிலேயே என்னை வைத்திருப்பது உன் பெருமைக்குத் தகுமா?' என்று கேட்டார். 'ஆழ்வீர்!என் எண்ணம் உமக்குத் தெரியாதா என்ன? செவிக்கினிய செஞ்சொற்கவிகளை எனக்குப் பாடித் தருவதற்காகவே உம்மை இங்கு வைத்திருக்கிறேன்' என்றான் பகவான். இச் செயலை நினைந்து நன்றி பாராட்டிக் கூறுகிறார் ஆழ்வார்.

தனக்குக் கவி பாடும் பேறு தந்தமைக்குப் பதிலுதவி இல்லை எனல்

கலி விருத்தம்

இன்றமிழ் பாடச் செய்த ஈசனை எப்படிப் பாராட்டுவேன்?

3425. என்றைக்குமூ என்னையுய யக்கொண்டு போகிய,

அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்

நின்ற வென் சோதியை, என்சொல்லி நிற்பனோ?

தானே தன்னைப் பாடிக்கொண்டவன் மாயன்

3426. என்சொல்லி நிற்பனென் இன்னுயி ரின்றொன்றாய்,

என்சொல்லால் யான்சொன்ன இன்கவி யென்பித்து,

தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்,என்

முன்சொல்லும் மூவுரு வாகும் முதல்வனே.

அப்பனை நான் மறக்கவேமாட்டேன்

3427. ஆம்முதல் வனிவ னென்றுதற் றேற்றி,என்

நாமுதல் வந்து புகுந்துநல் லின்கவி,

தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்ன,என்

வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ?

என் அப்பனை மறப்பேனோ!

3428. அப்பனை யென்று மறப்பனென் னாகியே,

தப்புத லின்றித் தனைக்கவி தான்சொல்லி,

ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு

செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?

இன்கவி பாடச் செய்தவர் பரமரே

3429. சீர்கண்டு கொண்டு திருந்துநல் லின்கவி,

நேர்பட யான்சொல்லும் நீர்¬ யிலாமையில்,

ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

பார்பரவு இன்கவி பாடும் பரமரே.

வைகுந்தநாதனே என்னைக் கவி பாடச் செய்தவன்

3430. இன்கவி பாடும் பரம கவிகளால்,

தன்கவி தான்தன்னைப் பாடுவி யாது,இன்று

நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,

வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

என்னைக் கவி பாடுவித்த வைகுந்தனையே நினைவேன்

3431. வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச்,

செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை,

வைகுந்த னாகப் புகழவண் தீங்கவி,

செய்குந்தன் றன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ

தகுதியற்ற என்னைத் தன்போலாக்கியவன் எம்பிரான்

3432. ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,

பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,

ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?

திருமால் செய்த உதவிக்குப் பதிலுதவி இல்லை

3433. திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,

இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,

மறப்பிலா வென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,

உறப்பல இன்கவி சொன்ன் வுதவிக்கே?

அப்பனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?

3434. உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,

அதுவுமற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,

பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,

எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே.

இவற்றைப் பாடினால் இன்பம் கிடைக்கும்

3435. இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,

அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,

இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,

எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களால் இன்பம் உண்டாகும்

'என்றனைநீ யிங்குவைத்த தேதுக் ª 'கன,மாலும்

'என்றனக்கு மென்றமர்க்கு மின்பமதா, - நன்றுகவி

பாட'எனக் கைம்மா றிலாமை, பகர்மாறன்

பாடணைவார்க் குண்டாமின் பம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மாயா வாமனனே
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  இன்பம் பயக்க
Next