உற்றமும் சுற்றமும் செய்ய வேண்டியது : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆகையால் இந்த வைதிக ஸம்ஸ்காரங்களில் செலவை எப்படியும் குறைத்தாக வேண்டும். இதில் பந்து மித்ரர்கள் செய்யக்கூடிய ஒரு உபகாரமும் உண்டு. அதாவது, கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் போகத்தான் வேண்டும் என்பதில்லை. பிரயாணத்துக்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கி கொள்வதில் என்ன பிரயோஜனம்? அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணிகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பிவிட வேண்டும். இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவு குறைவது ஒரு பக்கம்; அவசியமான செலவும் சீரும் செய்ய கல்யாணம் பண்ணிகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is செலவில் சாஸ்திரோக்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சிக்கனத்துக்கு மூன்று உபாயம்
Next