அக்னியின் சிறப்பு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

கிருஹஸ்தன் செய்ய வேண்டிய ஏராளமான அக்னி காரியங்களுக்கு ஆரம்பம்தான் ஒளபாஸனம். வேத மதத்துக்கு அக்னி ரொம்ப முக்கியம். அக்னி நாராயணன் என்றே அவரைச் சொல்கிறார்கள். ருத்ர ஸூக்தங்களைப் பார்த்தாலும் அக்னி சம்பந்தமே தெரிகிறது. திருவண்ணாமலையில் இப்படி அக்னி மலையாகவே ஈச்வரன் பூர்வத்தில் இருந்திருக்கிறார். அம்பாளையும் விளக்கிலே ஜோதி ஸ்வரூபிணியாக ஆராதிக்கிற வழக்கம் விசேஷமாய் இருக்கிறது. மலையாளத்தில் பகவதி பூஜைகளில் மூர்த்தி, யந்திரம் இவை முக்கியமில்லை; தீபத்தில்தான் தேவியை ஆவாஹனம் செய்கிறார்கள். ஈச்வரனின் அக்னி நேத்திரத்திலிருந்து உத்பவித்த ஸுப்ரமண்ய ஸ்வாமியையும் ஜோதி ஸ்வரூபமாகவே சொல்கிறோம். “ஆரியர்கள் என்றாலே Fire-worshippers தான்” என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். வேத மதத்தில் ஒரு பிரிவாகவே இருக்கப்பட்ட பார்ஸிகளைப் பார்த்தாலும் அவர்கள் அக்னியை ரக்ஷிப்பதுதான் பிரதானமான வழிபாடு என்று என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிராம்மணர்களுடைய வீட்டுக்கு வீடு அக்னி ஜ்வலித்து அதில் சாஸ்திரப்படி சேர்க்க வேண்டிய நெய், பால், ஹவிஸ் மணந்து கொண்டிருந்தால் அரோக திடகாத்திரமும் உத்தமமான மனோவிருத்திகளும் ஸகல ஜாதி ஜனங்களுக்கும் ஏற்படும்.

எந்த தேவதைக்கான யஜ்ஞம் செய்தாலும் அக்னியில்தான் ஹோமம் செய்ய வேண்டும் என்ற விஷயம் முன்பே சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அக்னி காரியங்கள்
Next