‘டிக்ரி’ இல்லாமலே மதிப்புப் பெற : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரிடையரானவர்கள் தங்களை மட்கப் பண்ணிக் கொண்டு உட்காராமல், கிளுகிளுவென்று கல்பக வ்ருக்ஷங்களாகி, ஸமூஹத்துக்கு நிழலும் பழமும் கொடுத்து ஆதரிக்க முடியும், ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். ஒரு ரிடையர்ட் என்ஜீனியர் இரண்டு பையன்களுக்கு ஓவர்ஸீயர் படிப்புக்கு ஸமமாக வீட்டிலேயே (முடிந்தால் அன்னமும் போட்டு) படிக்கக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் டிக்ரி வாங்க வேண்டுமென்பதுகூட இல்லை; இன்ன பெரியவரிடம் படித்தார்கள் என்பதாலேயே அவருடைய ஸர்டிஃபிகேட்டைப் பார்த்தே, ப்ரைவேட் கான்ட்ராக்டர்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். என்ஜீனியரீங் காலேஜில் தனக்கு இடம் கிடைக்கவில்லையே என்று forward community மாணவன் அழ இடமிருக்காது. இப்போது ஸங்கீதத்தில் ஒருத்தனின் டிக்ரியையோ டிப்ளோமாவையோ பார்க்காமல், இன்னார் சிஷ்யன் என்றுதானே கச்சேரிக்கு ஸபாக்காரர்கள் கூப்பிடுகிறார்கள்? அப்படியே forward community-ஐச் சேர்ந்த வாலிபர்கள் மற்றத் துறைகளிலும் காலேஜ் படிப்பை எதிர்பார்க்காமல் இன்னாருடைய சிக்ஷையில் கற்றுக்கொண்டான் என்பதாலேயே ப்ரைவேட் ஃபாக்டரிகள், கம்பெனிகள் ஆகியவற்றில் உத்யோகம் பெறக்கூடிய மஹா உபகாரம் நன்மதிப்பு பெற்ற அநுபவஸ்தர்களான பென்ஷனர்கள் ஒன்றுகூடி வித்யாதானம் செய்வதால் ஏற்படும். இப்போது ஸீ.ஏ., அந்த ‘டெக்’, இந்த ‘டெக்’ என்று எத்தனை படிப்புகள் தனியார் ஸ்தாபனங்களால் நடத்தப்பட்ட போதிலும் யூனிவர்ஸிடி டிக்ரிகளைவிட உசத்தியாக ஸர்க்கார் உள்பட எல்லாராலும் நினைக்கப்படுகின்றன? அம்மாதிரி இதுவும் வ்ருத்தியாக முடியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பள்ளிப்படிப்போடு பண்டைய சாஸ்த்ரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பெண்களுக்கான பணிகள்
Next