உபநிஷத்தில் உபவாஸம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

உபநிஷத்திலேயே பட்டினி போட்டு வ்ரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது*. ஆத்மாவை அடைவதற்கு பிராம்மணன் அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ், உபவாஸம் முதலியவற்றை அநுஷ்டிக்கிறான் என்கிற இடத்தில் அது உபவாஸமிருப்பதைச் சொல்லியிருக்கிறது. “அநாசகேந” என்று உபநிஷத்தில் உபவாஸத்தைக் குறித்திருக்கிறது. ‘அசனம்’ என்றால் சாப்பாடு. ‘ஆச’ என்றால் சாப்பிடுவது. ‘அநாசகேந’ என்றால் ‘சாப்பிடாமலிருப்பதால்’. ‘சாப்பிடாமல் உபவாஸம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயல்கிறார்கள்’ என்று உபநிஷத் சொல்கிறது.


* ப்ருஹதாரண்கம் – 4.4.22

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உபவாஸம் எதற்காக?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசார்யாள், கண்ணனின் மிதவாதம்
Next