கண் விழிப்பது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

யிற்றுக்காக வாயைத் திறக்காத உபவாஸ நாட்களில் பேச்சுக்காகவும் வாயைத் திறக்கப்படாது என்பதோடு இன்னொரு நியமத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு. வாயைத் திறக்கக்கூடாத அந்த நாளில் கண்ணை மட்டும் மூடக்கூடாது என்று நியமம்! இராப்பூராவும் கண் விழித்துக்கொண்டு, பகவத் சிந்தனை, கதை, கீர்த்தனை, பாராயணம் இதுகளிலேயே செலவழிக்க வேண்டும். வாயை மூடுவதாலேயே இப்படிக் கண்ணை மூடாமலிருக்கிற தெம்பு மன ஈடுபாடு இரண்டும் உண்டாகும். (‘கண்ணை மூடக்கூடாது’ என்பது ‘தூங்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில். நாள் முழுதும் கண்ணைத் திறந்துகொண்டே இருக்கணும் என்ற அர்த்தத்தில் இல்லை) , சிவராத்திரிக்கும் வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்கண் விழிப்பதை முக்யமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். விடிய விடிய ஸினிமா பார்த்து புண்யத்துக்கு (‘புண்யத்தை’ இல்லை) மூட்டை கட்டுவதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது! பிரதி ஏகாதசிக்குமே இந்த நியமம் சொல்வதுண்டு. ஏகாதசியில் செய்யவேண்டியது “போஜன த்வயம்” இல்லை, “போஜன த்ரயம்”; அதாவது உபவாஸம், பஜனை என்ற இரண்டோடு ‘ஜாகரணம்’ என்று மூன்றாவதாக ராக்கண் முழிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுண்டு.

கீதையில் ‘பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது’. தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது (நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவ சார்ஜுந) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக்கொண்டு ஈச்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் சாஸ்திரந்தான் ப்ரமாணம் (தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றவர்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மௌனத்துக்குரிய நாட்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தொடக்க நிலையும் முடிவு நிலையும்
Next