பத்தியம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

மற்றவர்கள் [வெளி நாட்டார்], நவீனர்கள் நம்முடைய ஆயுர்வேதத்தில் சிலாகித்துச் சொல்கிற ஒரு விஷயம், இதில் மருந்துகளைச் சொன்னதோடு மாத்திரமின்றி, அதைவிட முக்யமாகப் பத்தியங்களைச் சொல்லியிருப்பதாகும்.

‘பத்யம்’ என்றால் ஒரு வழியில் போகப் பண்ணுவது. பாதை, path என்பதெல்லாம் ‘பதி’யிலிருந்து வந்ததுதான். ஆரோக்யப் பாதையில் செலுத்துவதற்காக ஏற்பட்டதே பத்தியம். மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. உடம்பு ஸரியாவதற்கு இன்ன ஆஹாரங்களை நீக்கிவிட்டு, இன்ன மட்டுமே இன்ன அளவில் சாப்பிட வேண்டுமென்பது முக்யம். இதுதான் பத்தியாமயிருப்பது. இந்தப் பத்தியங்களில் ஒன்றாக ஸகல ஜனங்களுக்குமே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உபவாஸம் இருக்க வேண்டுமென்று வைத்திருக்கிறது. ஸகல ஜனங்களுமே அவ்வப்போது ஒரு வேளை, லங்கனம் போடுவது நல்லது; பக்ஷத்துக்கு ஒரு நாள் பூராவும் பட்டினியிருப்பது விசேஷம் என்று வைத்ய சாஸ்திரம் கருதுகிறது. இதையே ஏகாதசி சாஸ்த்ரமும் நம் பூர்விக வைத்ய சாஸ்த்ரமும் கை கோத்துக் கொண்டு போகின்றன என்பதற்கு இதுவும் உதாரணம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆயுர்வேதத்தில் இதர ஸயன்ஸ்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆயுர்வேதத்தைப் பின்பற்றக் காரணங்கள்
Next