முத்ராதிகாரித் திட்டம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒருத்தன் ஸரியானபடி ஸநாதன தர்மத்தைப் புரிந்து கொண்டு, அநுஷ்டித்துக் காட்டினால் அவனுடைய ஆசாரம், அநுஷ்டானம், விரதம் ஸம்பாத்யம் முதலான எதுவுமே தன்னலனுக்காக இல்லை. ஆனால் இந்த உயர்ந்த தத்துவம்-வெறும் தத்வமாக புஸ்தகத்திலும் மூளையிலும் மட்டும் இருந்து கொண்டிருக்காமல் வாழ்க்கையிலே ப்ரகாசித்துக் கொண்டிருந்த தர்மம் – எப்படியோ பிற்காலத்தில் வீணாகிவிட்டது. இதை மறுபடி புத்துயிரூட்ட வேண்டும். இந்த உத்தேசத்தோடுதான் 1940லிருந்து ‘முத்ராதிகாரிகள்’என்று தஞ்சாவூர் ஜில்லாவில் அநேகமாக எல்லா க்ராமங்களிலும் நம் மடத்திலேயே ஒவ்வொருத்தருக்கு அதிகாரம் தந்து அவர் முயற்சியில் ஜனங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொதுநலப் பணிகள் செய்ய ஏற்பாடு செய்தோம். அதிலே பூர்த்த தர்மம் என்று மேலே சொன்ன குளம், கிணறு வெட்டுகிற காரியங்களோடு, இந்த தர்மமெல்லாம் பூர்த்தியாகிற பகவத் கைங்கர்யங்களாகிற தேவலாயப் பாதுகாப்பு, ஏகாதசி புராண படனம் முதலியனவும் நன்றாக நடந்து வந்தன. கோயில் கோபுரங்களிலும் மண்டபங்களிலும் முளைத்திருக்கும் மரம், செடிகளைப் பிடுங்குவது, ப்ராகாரத்தில் நெடுஞ்சிமுள் முதலானதுகளை அப்புறப்படுத்துவது முதலான கார்யங்கள் தேவலாயப் பாதுகாப்பாகச் செய்யப்பட்டன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தொண்டின் உட்பயன்கள்;'திரு'ப்பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கோ ஸம்ரக்ஷணை
Next