பொதுத்தொண்டும், குடும்பப் பணியும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸோஷல் ஸர்வீஸ் பற்றி நான் சொன்னதில் அவர்களுக்கு என்ன ஆக்ஷேபம்? ஸோஷல் ஸர்வீஸ் என்பதை நான் over-emphasize பண்ணி (மிகையாக அழுத்தங் கொடுத்து) ச் சொன்னதால் ஸெல்ஃப் ஸர்வீஸ் (அவனவன் தனக்குச் செய்து கொள்ள வேண்டியது) , டொமெஸ்டிக் ஸர்வீஸ் [குடும்பத்துக்கான பணி] ஆகியவையெல்லாம் கெட்டுப் போகும்படியாகப் பண்ணியிருக்கிறேன் என்றுதான் ஆக்ஷேபம். அவர்கள் ‘ஆக்ஷேபம்’ என்று சொல்லிச் சண்டை போடாமல் அழுது விட்டுத்தான் போனார்களென்றாலும் இதுதான் அதற்கு அர்த்தம்.

நான் எப்பொழுது எதைச் சொன்னேனோ? [பத்திரிகைக்காரர்கள்] இப்பொழுது அதில் எதைப் போடுகிறார்களோ? அவனவன் தனக்குத்தானே பண்ணிக்கொள்ள வேண்டிய கார்யங்களையும், தன் வீட்டுக்குப் பண்ணவேண்டிய ட்யூட்டிகளையும் விட்டு விட்டு பரோபகாரம் என்று போக வேண்டும் என்று நான் நினைத்ததேயில்லை. அப்படி நான் ‘அட்வைஸ்’ பண்ணவும்மாட்டேன் ஆனாலும் உபந்நியாஸம் என்று செய்கிறபோது இதைப்பற்றி விசேஷமாகச் சொல்லாமலிருந்திருக்கிறேன் போலிருக்கிறது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஒருவன் செய்துகொள்வது சொந்தமாக ஏற்பட்ட ஸ்வபாவமான ஸமாசாரம். இதைப்பற்றி வெளி மநுஷயர்கள் விசேஷமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை. ஸமூஹம் முழுவதற்கும் நல்லதற்கானதைச் சொல்லவும், அதற்காகத் திட்டங்களைப் போட்டுக் கார்யங்கள் பண்ணவுந்தான் நாங்கள் (ஆசார்ய பீடங்கள்) ஏற்பட்டிருக்கிறோம். அதனால் ஸோஷல் ஸர்வீஸை stress பண்ணியிருப்பேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸ்தோத்திரமும் கண்டனமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஹிந்து மதமும் தனிமனிதனும்
Next