ஒருவரே போதுமெனில் அவர் ஈச்வரனா, குருவா ? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்போது ஒரே ரூபத்தில் முழு பக்தியையும் செலுத்தி விட்டாலே போதும் என்கிறபோது, ‘ஈச்வரன்தானே குரு? அதனால் ஈச்வரனிடமே அநன்ய பக்தி பண்ணிவிடுவோம்’ என்று இருக்கலாமா? அல்லது ‘குரு என்பவர் ஸாக்ஷாத் ஈச்வரன் தானே? குருஸ் – ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம என்கிறோமே? அதனால் குருவிடமே பூர்ண பக்தியும் செலுத்தி விடுவோம்’ என்று இருக்கலாமா?

இப்போது எடுத்துக்கொண்டிருக்கிற topic குருவாக இருப்பதால் குருவே ஈச்வரன் என்று அவர் ஒருத்தரிடமே முழு பக்தி விச்வாஸமும் வைத்து சரணாகதி பண்ணிவிட வேண்டுமென்றுதான் சொல்லப் போகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸ்லோகப் பொருளில் மாறுதல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மாறுபாட்டில் ருசியே மனித இயற்கை
Next