‘ஈசனே குரு’ என்பதும், ‘குருவே ஈசன்’ என்பதும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்த இரண்டுக்குமிடையில் என்ன வித்யாஸம், புரிகிறதோல்லியோ? ‘ஈச்வரனையே குரு’ என்றால், ‘இந்த லோகத்தில் மநுஷரூபத்தில் தெரிகிற எந்த குருவையும் நாம் தேடிப் போகவேண்டாம்; ஈச்வரனொருத்தனிடமே பக்தி பண்ணுவோம்; அவனே நல்வழி காட்டுகிற குருவாக நம்மை அழைத்துப்போகட்டும்’ என்றிருப்பது. ‘குருவையே ஈச்வரன்’ என்றால், அதுதான் நான் வித்தியாஸப்படுத்தப் போகிற விஷயம்: ‘ஈச்வரன் என்று கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருத்தனை, அல்லது ஒரு சக்தியை, Power -ஐ நினைத்து பக்தி பண்ண வேண்டாம்; கண்ணுக்கு முன்னால் தெரிகிறாரே, குரு என்று – இவரே நமக்கு ஸகலமும், இவரே நமக்கு ஈச்வரன், கீச்வரன் எல்லாம்; இவரொருத்தரையே பக்தி பண்ணுவோம்’ என்று இருப்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அநன்ய பக்தி; நடைமுறை சிரமங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குருவையே ஈசனாகக் கொள்வதெப்படி?
Next