எந்த பாவத்தினாலும் ஈசனருள் பெறலாம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மனோபாவத்தில், பக்தி பாவத்தில் பல விதமாக ஜனங்களுக்கிடையிலே வைத்திருப்பதில் அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் போய், அதற்கு ஈச்வரன் எப்படி அநுக்ரஹிக்கிறானோ அப்படிப் பெறவேண்டியது. அவனையே நேராக நம்பிப் போகிறவர்களையும் அவன் ஒரே தூக்காகத் தூக்கி அநுக்ரஹிக்கிறான். அவனையும் ஆசார்யனையும் ஸமமாக பக்தி செய்கிறவனுக்கும் அப்படிப்பட்ட பரமாநுக்ரஹம் பண்ணுகிறான் – விளையாட்டாகத் தான் பாதி பண்ணுவது, குரு பாதி பண்ணுவது போலக் காட்டிப் பண்ணுகிறான். ஆசார்யனொருவனே போதுமென்று பக்தி செய்கிறவனுக்கும் இத்தனை நாழி சொன்னதுபோல அவருடைய அந்தர்யாமியாக இருந்து கொண்டும், அவர் இவனுடைய behalf -ல் செய்யும் அநேக கார்யங்களை மதித்து நிறைவேற்றிக் கொடுத்தும் பரமாநுக்ரஹத்தைப் பண்ணுகிறான். இந்த மூன்றாவது பாவத்தை ‘அநுபவ’ மாக்கிக் கொள்வதற்கு ‘யுக்தி’ யாகவே இத்தனை நாழி விஸ்தாரம் பண்ணிச் சொன்னது. மற்ற இரண்டு வித அநுபவங்களுக்கும் இது போலவே யுக்தி உண்டு. இன்றைக்கு என்னவோ தோன்றிற்று, இப்படியும் ஒரு பாவம், ஸாதனாமார்க்கம் – குருவிடமே அநன்ய பக்தி பண்ணுவது என்று இருப்பதை எடுத்துச் சொல்லலாமென்று.

ஈச்வரனிடம் போக வழிமட்டும் காட்டுபவரென்றோ, ஈச்வரன் மாதிரியே அவனுக்கு ஸமமாக இருப்பவரென்றோ, நமக்கு இவரைவிட்டு ஈச்வரன் கூட வேண்டியதில்லையென்றோ எதுவோ ஒரு விதத்தில் ஒரு குருவிடம் பக்தி வைத்து நல்லதைத் தெரிந்து கொண்டு நல்ல வழியில் போவதற்கு அவரவர்களும் தன்னாலான முயற்சியைப் பண்ணவேண்டியது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரு-சிஷ்யர்:இருபெரும் தர்மங்களின் உருவகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குருமுகமாக அறிவதன் சிறப்பு
Next