ச்ரத்தை பூர்ணமாகிவிட்டால் குருவிடம் பூர்ண சரணாகதியும் வந்துவிடும். அப்போது அவர் வாய் வார்த்தையாக உபதேசிப்பது, அதை இவன் மூளை மட்டத்தில் இறக்கிக் கொள்வது, நன்றாக இறக்கிக் கொண்டோமா என்று சோதித்துக் கேள்விகள் கேட்பது என்பதற்செல்லாங்கூட அவச்யமே இல்லாமல் போய்விடும். குரு அநுபவத்தை அப்படியே நேராக சிஷ்யனின் ஹ்ருதயத்துக்குள்ளே இறக்கிவிடுவார். மற்றவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அப்போது அவர் மூளை மட்டத்திலும் அவனுக்கு 'எக்ஸ்ப்ளனேஷன்'கள் கொடுத்து உபதேசம் செய்வதாக இருக்கும்.
அந்த சரணாகதியைத்தான் சாஸ்திரம் தலைமையானதாக விதித்திருக்கிறது. ஸ்த்ரீ ப்ரஜைக்குப் பதியிடம் சரணாகதி, புருஷ ப்ரஜைக்கு குருவிடம் சரணாகதி - அதுவே மோட்ச ஸாதனம் என்று சொல்லியிருக்கிறது.